போலீஸ் காவலில் நிகழ்ந்த இறப்புச் சம்பவங்களுக்குப் பொறுப்பான போலீஸ்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரைச் சாடிய கோபிந்த் சிங் டியோ(டிஏபி- பூச்சோங்), அவரை ஒரு கோழை என்று வருணித்தார்.
கடந்த ஆண்டு ஜோகூர் போலீஸ் லாக்- அப்பில் சைட் முகம்மட் அஸ்லான் சைட் முகம்மட் நோர் மரணமுற்றதற்கு போலீஸ்தான் காரணம் என்று அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம்(EAIC) விசாரணை செய்து கூறியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
“நான் ஐஜிபி-யைக் கேட்கிறேன், மற்றவர்களைக் கோழைகள் என்று அழைக்கிறீர்களே, போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
“ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இறந்து போனவரின் குடும்பத்தினருடன் பேசும் துணிச்சல் ஐஜிபிக்கு உண்டா? அவர்களை அவர் தொடர்பு கொண்டதுண்டா?
“ஐஜிபி வெட்கப்பட வேண்டும். நீங்கள், நீங்கள்தான் கோழை”, என நாடாளுமன்றத்தில் 2016 பட்ஜெட்டில் உள்துறை அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசியபோது கோபிந்த் கூறினார்.
முக்கியமான புள்ளிகளைக் குற்றவாளிகளாகக் குறிப்பிடும் சத்திய பிரமாணத்தைச் செய்து விட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடிய சார்ல்ஸ் மொராய்ஸைக் கோழை என்று காலிட் வருணித்திருந்ததற்கு எதிர்வினையாக கோபிந்த் அவ்வாறு கூறினார்.
பார்த்துக்கப்பா! இப்ப எதைப் பேசினாலும் ஐ.ஜி.பி. தேச நிந்தனை சட்டம் என்று உளறுகிறார்!
உண்மைதான் கோபிந்த் அவன் கோழை அல்ல இவனுக்கு இன்னொரு பெயர் வைக்கலாமே ஊழல் மன்னன்
நாம் என்ன சொன்னாலும் இவனுக்கு ஏறாது புரியாது- அதைப்பற்றி இவன்னுக்கு என்ன கவலை? ஒவ்வொரு மாதமும் சம்பளமும் கிம்பளமும் வங்கி கணக்கை நிரப்பும் போது வேறு என்ன வேண்டும்?
சார்லசுக்கு நன்றாக தெரிந்திருக்கும் நாம் இங்கிருந்தால் பாலாவுக்கு ஏற்ப்பட்ட கதி தான்நமக்கும் என்று ஒரே ஓட்டமாக ஓடி விட்டார்
அறிவாளி .தப்பித்தாய் திரும்பி இங்கு வராதே.
ஊமை விழிகள் உறங்கட்டும் . ஆண்மை அலங்கோலப்பட்டு விட்டது . மேன்மை மேதாவியாகிவிட்டது .
நம் நாட்டில் நீதி, நேர்மை என பேசி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். அழிவை நோக்கி வெகு வேகமாகப் போய் கொண்டிருக்கிறோம். ஊழல் செய்தால்தான் அதிகாரி என்றாகிவிட்டது. ‘சுருட்டினால்தான்’ தலைவன் என்றாகிவிட்டது. ஆளும்கட்சியிலும் சரி எதிர்கட்சியிலும் சரி, மக்கள் சேவை என்பது செல்லாக் காசாகி விட்டது.
நல்ல செருப்படி !!!
வணக்கம் . நான் பலமுறை கூறியதை போல, நன்கு படித்த, சட்டம் தெரிந்த, மதம்,இனம் பார்க்காத,ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்த,இலஞ்சம் பெறாத,நேர்மையான, அனைத்துலக நிகழ்சிகளில் கலந்துக்கொள்ளும்போதும், ஊடக நேர்கானளின்போதும் போலிஸ் தளபதிக்கான முழுமையான உடை அணிந்து தனது நிலையை உயர்வாக காண்பிக்கும் தளபதியாக இருந்தாலே நாடு உருப்படும், மக்களும் மதிக்கப்படுவர். இல்லையேல் ‘அப்பா இனி ,அப்பா இனி, சாயா சுக்கா மாக்கான் தோசை, பூவாட் வாரூங் டி டெப்பன் ரூமா சாயா’ நேர்காணலை மறக்க இயலாது. நன்றி
அன்பர் சிங்கம் சொல்வது சரியே!! இனி சட்டம் என் கையில். சிந்தித்து செயல் படுவது அவரவர் திறமையை பொறுத்தது. முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்!!
இப்படியே எல்லோரும் நீதி நேர்மை செத்து நாளாட்சின்னு ஒரே பாட்டா பாடி அடுத்த தலைமுறையை உசுப்பு ஏத்தி விட்ருவோம்!!! அப்பத்தான் அவங்க நம்ம வீட்டிலே புகுந்து நம்ம கழுத்திலே கத்தியே வச்சி கொள்ளையடிக்க குற்ற உணர்வு இருக்காது……