பன்றி டிஎன்ஏ பற்றிய கவலை இருந்தாலும் மலேசியா தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கும்

vaccineதடுப்பூசி  மருந்துகளில்  பன்றி-டிஎன்ஏ  கலந்திருக்கலாம்  என்று  பெற்றோர்  கவலை  தெரிவித்திருந்தாலும்  மலேசியா  குழந்தைகளுக்குத்  தடுப்பூசி  போடுவதை  விரைவில்  கட்டாயமாக்கும்  என்று  ஒரு  செய்தி  கூறியது.

நோய் எதிர்ப்புத் திறனூட்டுவதன்வழி  தடுக்கப்படக்கூடிய  நோய்களின்  எண்ணிக்கை  உயர்ந்து  வருவதால்  தடுப்பூசி  போடுவது  அவசியமாகிறது  என்று  சுகாதார  அமைச்சின்  துணைத்   தலைமை  இயக்குனர்  லொக்மான்  ஹக்கிம்  சுலைமான்  கூறினார்.

தடுப்பூசி  போடுவதைக்  கட்டாயமாக்குவது  தொடர்பில்  தமது  அலுவலகம்  மற்ற  அமைச்சுகளுடன்  கலந்து பேசி  வருவதாக  லொக்மான்  கூறியதாக  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  செய்தி  வெளியிட்டிருந்தது.

“மக்கள்  தனிப்பட்டவர்  உரிமை  பற்றிப்  பேசுகிறார்கள்.  ஆனால்,,அவர்கள்  பொதுமக்களின்  உரிமைகளையும்  தடுப்பூசி  மூலம்  தடுக்கப்படக்கூடிய  நோய்களிலிருந்து  பாதுகாப்பு  பெறும்  அவர்களின்  உரிமையையும்  எண்ணிப்  பார்க்க  வேண்டும்”,  என்றவர்  குறிப்பிட்டார்.

குழந்தைகளை  உயிருக்கு  அபாயத்தை  உண்டுபண்ணும்  தட்டம்மை,  இசிவு நோய்,  இளம்பிள்ளை  வாதம்,  ஹெபடைடிஸ்  போன்ற  நோய்களிலிருந்து  பாதுகாப்பது  முக்கியம்  என்றவர்  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்சிடம்  தெரிவித்தார்.