செந்தமிழின் மேல்முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில் தள்ளுபடி

nthaபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர் ஆகியோர்  மீதும்  மேலும்  ஐவர்  மீதும்  குடும்பத்  தலைவி  ஏ.செந்தமிழ்ச்செல்வியும்  மற்றும்  இருவரும்  ரிம1.9 மில்லியன்  வழக்கை  அனுமதிக்கக்  கோரி  செய்திருந்த  மேல்முறையீட்டைக்  கூட்டரசு  நீதிமன்றம்  தள்ளுபடி  செய்தது.

காலஞ்சென்ற  தனியார்  துப்பறிவாளரான  பி.பாலாசுப்ரமணியத்தின்  மனைவியான  செந்தமிழ்  உயர்  நீதிமன்றத்தில்  தன் வழக்கு  தள்ளுபடி  செய்யப்பட்டதை  எதிர்த்து  முறையீட்டு  நீதிமன்றத்தில் முறையீடு  செய்து  அங்கும்  நிராகரிக்கப்படவே  கூட்டரசு  நீதிமன்றத்துக்குச்  சென்றார்.

அங்கு  அவரது  முறையீட்டை  விசாரித்த  மூவரடங்கிய  நீதிபதிகள்  குழு  அவரது  முறையீட்டை  அனுமதிக்க  இயலாது  எனத்  தீர்ப்பளித்தது.

மேலும்,  செந்தமிழ்  எதிர்வாதிகளான  நஜிப்புக்கும்  ரோஸ்மாவுக்கும்  மற்ற  ஐவருக்கும்  ஆளுக்கு ரிம10,000  செலவுத்  தொகை  கொடுக்கும்படியும்  கூட்டரசு  நீதிமன்றம்  உத்தரவிட்டது.