பாஸ்மா (Pertubuhan Sejahtera Ummah Malaysia) தலைவர் பாரோல்ரஸி ஸவாவி, எதிரணியினர் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்திக்கொண்டு பிஎன்னை எதிர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறார்.
டிஏபி, பிகேஆர், பாஸ், பார்டி அமானா நெகாரா(அமானா) ஆகியவை தங்களுக்குள் சேற்றைவாரி வீசிக் கொள்வது நேரத்தை விரயமாக்கும் செயல் என பாரோல்ரஸி கூறினார்.
“எதிரணி- ஆதரவு என்ஜிஓ என்ற முறையில் கவனமெல்லாம் பிஎன்மீதுதான் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.
“பாஸ் ஒன்றும் அரசாங்கம் அல்ல. அது கிளந்தானில் ஒரு ஆளும் கட்சியாக இருக்கிறது அவ்வளவுதான். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது எதிரணிக்கு எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கி விடும்”, என பெங்கலான் குண்டோர் சட்டமன்ற உறுப்பினருமான பாரோல்ரஸி கூறினார்.
பக்காத்தான் ராக்யாட்டின் பொதுக் கொள்கையை மீறிய கட்சியைக் கொண்டு குடும்பம் நடத்தினால் அது வேசியிடம் உறவு கொள்வதுபோல் ஆகிவிடும்!! “கழுவுற மீனில் நழுவுற மீன்” பக்காத்தானில் வேண்டவே வேண்டாம்!! இல்லையெனில், அரசு மாற்றம் என்பது எட்டாக் கனியே!!!!
எதிர்கட்சியில் உள்ள ஒரு சில உயர்மட்ட தலைகளை BN வாங்கிவிட்டது. ஆகவே சண்டை ஒருபோதும் ஓயாது. உதாரணம் ஹாடி அவாங், மற்றும் பினாங்கின் குடுமிப்பிடி சண்டை. அடுத்த பொதுத்தேர்தலில், தற்போதைய நாற்காலிகளை விட குறைவான பார்லிமென்ட் நாற்காலிகளையே எதிர்கட்சிகள் வெல்லும். குறித்துக் கொள்ளுங்கள். டி.எ.பி.யில் விலைபோன தலைகள், அப்பனும் மவனும் என்றால், சிலருக்கு ஆச்ச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.
தே.மு. – க்கு வெளியிருந்து எதிர்ப்புத் தேவை இல்லை. தே.மு. – குள்ளேயே எரியும் நெருப்பு அக்கூட்டணியை எரித்து விடும். பக்காதான் ஹரப்பான் ஒற்றுமையாக இருந்தாலே அடுத்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று விடலாம். அந்த ஒற்றுமையை கலைக்க அஸ்மின் முயன்றால் அஸ்மின் அடுத்த முறை முதலமைச்சர் பதவியை இப்பொழுதே மறந்து விடலாம்.
மில்லியன் கணக்கில் வெளிநாடு விசுவாசிகள் வர உள்ளனர்.எங்கு போய் முடியுமோ என்ற கவலை மக்களிடம் உள்ளது.எதிர்கட்சியினர் இதற்கு வழியை காணுங்கள்.