ரிம2.6பி. விவகாரத்தில் ஒரு எண்டி-கிளைமெக்ஸ்: 3-நிமிட விளக்கம் கொடுத்து முடித்தார் துணைப் பிரதமர்

exபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நாடாளுமன்றத்தில் ரிம2.6 பில்லியன் விவகாரம்  பற்றி   விளக்கமளிக்கப்  போகிறார்  என்பது  கடந்த  சில  வாரங்களாக  பெரும்  எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி  இருந்தது. ஆனால், எதிர்பார்ப்பு  ஏமாற்றத்தில்  முடிந்தது.

விளக்கம்  அளிக்கப்பட்டது.  விளக்கம்  அலித்தவர்  பிரதமர்  அல்ல.  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி.

அதுவும்  மூன்றே  நிமிடங்களில்  விளக்கத்தை  முடித்துக்  கொண்டார்.

விளக்கமளிப்புக்குப்  பின்னர்  எதிரணியினர்  கேள்விகள்  கேட்பதற்கு மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா அனுமதிக்கவில்லை.

நிலை ஆணை 14(1) (1)-இன்கீழ்  விளக்கம்  அளிக்கப்படுகிறது  என்பதால்  கேள்விகளுக்கோ விவாதங்களுக்கோ  இடமில்லை  என்றார்.

ஜாஹிட்  தம்  விளக்கமளிப்பில்,  ரிம2.6 பில்லியனை  ஓர்  அரசியல்  நன்கொடை  என்பதை மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்  உறுதிப்படுத்தியுள்ளது   என்றும்  கொடையாளரையும்  அடையாளம்  கண்டிருக்கிறது  என்றும்  தெரிவித்தார்.

“அரசியல்  நன்கொடைகளைப்  பகிரங்கமாக  தெரிவிக்க  வேண்டும்  என்றோ, நிறுத்த  வேண்டும்  என்றோ  மலேசியாவில்  சட்டம்  ஏதும்  கிடையாது”, என்றாரவர்.

நஜிப்  அரசியல்  நன்கொடைகளை  முறைப்படுத்தப்  போவதாக  சூளுரைத்திருப்பதாக  ஜாஹிட்  சொன்னார்.

ஆனால், அரசியல்  நன்கொடைகளை  முறைப்படுத்தும்  முயற்சிகளை  எதிரணியினர்தான்  நிராகரிக்கிறார்கள்   என்றும்  அவர்  தெரிவித்தார்.