விளக்கமளிக்கக் கூடாது என்பது ஏஜி-இன் அறிவுரையாம்- அமைச்சர் கூறினார்

adviceபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ரிம2.6 பில்லியன்  நன்கொடை பற்றி  விளக்கம்  அளிக்க  இன்று  நாடாளுமன்றம்  வரவில்லை.  ஏனென்றால்  அதைப்  பற்றி  விளக்கமளிக்க வேண்டாம்  என்று  சட்டத்துறைத்  தலைவர்  அபாண்டி  அலி  அறிவுறுத்தியுள்ளாராம். .

பிரதமர்துறை  அமைச்சர்  அஸ்லினா  சைட்  ஒஸ்மான்  இதனைத்  தெரிவித்தார்.

“விசாரணைக்கு  உள்பட்ட  விவகாரங்கள்  பற்றி  விவாதிக்க  வேண்டாம்  என்று  சட்டத்துறைத்  தலைவர்   அரசாங்கத்துக்கு  அறிவுரை  கூறியுள்ளார்.

“அதனால்தான்,  நாடாளுமன்றத்தில்  அவ்விவகாரத்தின்  தற்போதைய  நிலையை  விளக்க  அமைச்சர்  நிலையில் அறிக்கை  விடுவது  போதும்  என  அரசாங்கம்  முடிவு  செய்தது”, என்றவர்  தெரிவித்தார்.