பயணிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது; அப்படியிருக்க போக்குவரத்துக் கட்டணம் ஏன் உயர வேண்டும்?

railபொதுப்  போக்குவரத்தைப்  பயன்படுத்துவோர்  எண்ணிக்கை  கூடியிருக்கும்போது  அதன் கட்டணம்  உயர்த்தப்பட்டது  அநியாயம் என்கிறார்  பிகேஆர்  தகவல்  தலைவர்  சைட்  இப்ராகிம்  சைட்  நோ.

2014 அரசாங்கப்  போக்குவரத்து  திட்ட (ஜிடிபி)  அறிக்கையைச்  சுட்டிக்காட்டிய  அவர்  2014-இல்  685,706   பேர்  ரயிலைப்  பயன்படுத்திப்  பயணம் செய்திருக்கிறார்கள்  என்றார்.  இது  முந்திய ஆண்டில்  பயணம்  செய்தவர்  எண்ணிக்கையைவிட  23 விழுக்காடு  அதிகமாகும்.

உச்ச-காலப்  பயணிகளின் எண்ணிக்கை  ஆண்டுக்கு  ஆண்டு  பெருகிக்  கொண்டே  வருகிறது, உச்ச-காலம் காலை  6மணியிலிருந்து 10 வரை.

“இப்  பெருக்கம்,  நடைமுறை மற்றும் பராமரிப்புச்  செலவுகளைச்  சரிக்கட்ட  போதாதா?”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  வினவினார்.
குடும்பச்  செலவுமீதான  அரசாங்க  அறிக்கை  சராசரி  குடும்பம்  அதன்  வருமானத்தில்  14.6 விழுக்காட்டைப்  போக்குவரத்துக்குச்  செலவிடுவதைக்  காட்டுகிறது  என்று  கூறிய  சை  இப்ராகிம்  கட்டண  உயர்வால்  நகர்புற  மக்கள்  கடுமையாக  பாதிக்கப்படுவார்கள்  என்றார்.