என்எஸ்சி சட்டவரைவை நிராகரிப்பீர்: அனைத்துலக என்ஜிஓ மேலவைக்கும் பேரரசருக்கும் வேண்டுகோள்

icjஅனைத்துலக  ஜூரர்கள்  ஆணையம் (ஐசிஜே)  பிரதமருக்கு  விரிவான  அதிகாரங்களை  வழங்கும்  தேசிய  பாதுகாப்பு  மன்ற  சட்ட(என்எஸ்சி) வரைவைப்  புறந்தள்ளும்படி  மேலவையையும்  பேரரசரையும்  கேட்டுக்  கொண்டிருக்கிறது.

“முழுமையான  வாதமின்றியே அந்தச்  சட்ட  வரைவு  மேலவையில்  நிறைவேற்றப்பட்டு  பேரரசரால்  ஏற்கப்படும்  என  ஐசிஜே  எதிர்பார்க்கிறது.

“என்றாலும், அச்சட்ட  வரைவை இப்போதைய  வடிவில்  ஏற்காமல்  சட்ட  ஆளுமைக்கு  இசைவான  திருத்தங்கள்  செய்யப்படுவதற்கு  மக்களவைக்கே  திருப்பி  அனுப்புமாறு  மேலவையையும்  பேரரசரையும்  கேட்டுக்கொள்கிறோம்”, என ஐசிஜே-இன்  அறிக்கை  கூறியது.

அச்சட்ட  வரைவு  விரிவான அதிகாரங்களை  வழங்குவதாலும் பாதுகாப்பு  அம்சங்கள்  அதில் இல்லை  என்பதாலும்  அதிகாரங்களை  விருப்பம்போல்  பயன்படுத்திக்  கொள்ளும்  நிலை  உருவாகலாம்  என  ஐசிஜே-இன்  தென்கிழக்காசியாவுக்கான  மூத்த  ஆலோசகர்  எமிர்லின்  ஜில்  கூறினார்.

“பேச்சுரிமையையும்  மற்ற  உரிமைகளையும்  கட்டுப்படுத்துவதற்கும்  இச்சட்ட  வரைவு  பயன்படுத்தப்படலாம்”, என்றாரவர்.