அறிக்கைகள் மூலமாக மற்றவர் மனத்தை நோகடித்தார் என்று முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம் இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
ஜைட் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். ஜனவரி 22ஆம் நாள் விசாரணை என நீதிபதி ஜக்ஜிட் சிங் விசாரணைக்கு நாள் குறித்தார்.
ஜைட்டுக்கு பிணை விதிக்க வேண்டும் என்ற அரசுதரப்பின் கோரிக்கையையும் நீதிபதி ஏற்கவில்லை. ஜைட் தப்பி ஓடி விட மாட்டார் என்றாரவர்.
செப்டம்பர் 3-இல் ஆற்றிய உரை ஒன்றில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்காக தொடர்பு, பல்லூடகச் சட்டம் பகுதி 233 (1) (ஏ)-இன்கீழ் ஜைட்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
என்னவோ, துக்ளக் ஆட்சி போல் தோன்றுகிறது!
சட்டத்துறையை கவனித்து வந்த முன்னாள் அமைச்சருக்கே இந்நாட்டில் பேச்சுரிமை மறுக்கப் படுகின்றது. இதில் வேறு தேசிய பாதுகாப்பு மன்ற சட்ட மசோதாவைக் கொண்டு, அளவுக்கு மீறி ஒருவர் கையில் நிலை கொண்டிருக்கும் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்துவது அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழி விட்ட மாதிரியாகி விட்டது. வாழ்க மலேசிய பணநாயகம்.
இது நாவாப் ஆட்சி. இந்நாட்டு மக்களை பிற நாட்டிற்கு அடமானம் வைக்கும் ஆட்சி. சாயப் போகும் ஆட்சி. இனி எந்த நேரத்திலும் அமீனோ கட்சியில் அடித்தள உறுப்பினர்கள் வெகுண்டெழுந்து ஆட்சியைக் கலைக்கும் நாள் வெகு தூரமில்லை.
நஜிப் வும்நோவுக்கு ஆதரவாக தலை அசைத்தாலே போதும் அணைத்து விவகாரமும் மறைந்துவிடும்.அவர் நஜிப் எல்லா இனத்திற்கும் எல்லாம் சென்று சேரவே வும்னோவுக்கு ஆதரவாக செயல்படாது தனித்து நின்று பகைமையை வளர்த்து கொண்டார்.
அனைத்தும் பகையும் விலகிவிடும் கடைக்கண் பார்வை வும்னோ பக்கம் விழுந்தால்,
நடுநிலையாய் நின்று அனைவரும் பயன்பட கருத்து பகிர்ந்தால் சமுகத்திற்கு விடிவு பிறக்கும்,
மாற்று அரசால் பயன் பெற்றதாக நினைப்பது தவறு ஹின்ராப் நமக்கு விழிப்பை கொண்டுவந்தது ஆனால் அன்வர் ஹின்ராப் நமக்காக யாசித்த சலுகையை புறக்கணித்தது.தாயிடமிருந்து பிள்ளையை அபகரித்து.நமக்கென்ற புகலிடம் ஹிண்ட்ராப் கதவுகள் என்றும் திறந்திருக்கும் வாருங்கள்
vaalga narayana நாமம்.
இன்றைய அரசியல் பார்வையில், தேசிய பாதுகாப்பு மன்ற சட்ட மசோதாவைக் கொண்டு, அனைத்தையும் தமது அதிகாரத்தின் கீழ் இரும்புக்கரமாய் பிடித்து, தன நிலையை தற்காத்துக்கொள்ள சர்வாதிகார அதிகாராம் ஒன்றே சிறந்த வழி என்ற நோக்கத்தில் இந்த அதிகார மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது போலல்லவா தெரிகிறது!!!