உலக ஸ்குவாஷ் போட்டி ஒத்திவைக்கப்பட்டதற்குப் பணப் பற்றாக்குறையும் காரணமாகும் என்று இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
“ஏற்பாட்டாளர்கள் நேற்று அமைச்சுக்குத் தெரிவித்த மறுமொழியில் பாதுகாப்புப் பிரச்னை மட்டும் காரணமல்ல என்பதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் பணப் பிரச்னையை எதிர்நோக்கி வருகிறார்கள்.
“ஏற்பாட்டு ஆதரவு கிடைக்காததுதான் முக்கிய காரணம் என்றும் அதனாலேயே ஒத்திவைக்க முடிவு செய்ததாக நேற்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்”, எனக் கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஏற்பாட்டாளர்கள் பணத்துக்கு அரசாங்கத்தின் உதவியையும் நாடினார்கள். ஆனால், அரசாங்கத்தால் உதவி செய்ய இயலாது என்று கைரி கூறினார்.
“இது உலக ஸ்குவாஷ் போட்டி. அவர்கள்தான் ஏற்பாட்டாளர்கள். பணத்தைத் தேடுவது அவர்களின் பொறுப்பு”, என்றார்.
உலக ஸ்குவாஷ் போட்டி. டிசம்பர் 11-இலிருந்து 18வரை கோலாலும்பூரில் நடைபெறுவதாக இருந்தது.
கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற மாதிரி பேசுகின்றார் இந்த மந்திரி. நம் விளையாட்டாளர்கள் சிறந்து விளங்கும் ஸ்குவாஷ் உலக போட்டியை ஏற்று நடத்த தகுதி இல்லாத மந்திரி சொல்லும் கதை கதையாம் காரணமாம். ‘சேப்பாக் தக்ரவ்’ போட்டியை ஏற்று நடத்த நம் அரசாங்கத்திடம் பணம் இருக்கா?
இது உண்மையோ அமைச்சரே ? கோடி கோடியாய் மக்கள் வரிப்பணம் வருகிறதே. பணம் பற்றாக்குறை என்று சொன்னால் அந்த வரிப்பணம் எங்கே ? சொல்லுங்கள் அமைச்சரே.
UMNO காரணங்க BN அரசாங்கம் கஜானா மற்றும் எல்லா பணத்தையும் கையாடி தங்கள் வங்கி கணக்கில் போட்டதால் நாடு திவாலாகி எந்த போட்டியும் நடத்த முடியாமல் போயிட்று இதுதான் தலைப்பாக வரணும்.
chun naji, தெளிவாகவும் சூடாகவும், செவுனியில் அரைந்தார்ப்போல் சொன்னீர்!!! நல்ல செருப்படி!!!! இருப்பினும் மக்கள் வரிப்பணம் அம்பேல்தான்!!!! உண்மை நிலவரம் கஜானா காலி!!!!