சட்ட வல்லுனர்: என்எஸ்சி-யை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம்

azizநாடாளுமன்றத்தில்  சர்ச்சைக்குரிய தேசிய  பாதுகாப்பு  மன்ற(என்எஸ்சி)ச்  சட்டம்   எளிதில்  நிறைவேற்றம்  காண்பதைத்  தடுத்து  நிறுத்த  முடியாது  என்றே  தோன்றுகிறது. ஆனால்,  வேறு  வழியில்  அதைத்  தோற்கடிக்கலாம்  என்கிறார்  அரசமைப்புச்  சட்ட  நிபுணர்  அப்துல்  அசீஸ்  பாரி.

அச்சட்ட  வரைவை  எதிர்ப்போர்  கடைசி  முயற்சியாக  கூட்டரசு  நீதிமன்றத்துக்குச்  செல்லலாம்  என்றாரவர்.

அதே  வேளை  செனட்  அச்சட்ட வரைவை  நிராகரிக்கலாம்,  குறைந்த  பட்சம்  12  மாதங்களுக்குத்  தாமதப்படுத்த  வேண்டும் என்றவர்  விரும்புகிறார்.

“மேலவையால்  சட்ட வரைவைத்  தடுத்து  நிறுத்த  முடியாதுதான். ஆனால் 12 மாதங்கள்  தாமதப்படுத்தினால்  விவாதங்கள்   நடத்தியும்  பல்வேறு  அரசியல் முயற்சிகளை  மேற்கொண்டும்  சட்ட  வரைவைத்  தடுக்க  முடியும்”, என்று  ஆசிஸ்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.