பிரதமரிடம் எம்ஏசிசி விசாரணை

pmமலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி) இன்று  காலை  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்திலிருந்து  அவரது  வங்கிக்  கணக்குக்கு   மாற்றிவிடப்பட்ட  ரிம42 மில்லியன்  பற்றியும்  ரிம2.6 பில்லியன்  நன்கொடை  பற்றியும்  விசாரணை  செய்தது.

மலேசியாவில்  நாட்டின்  தலைமை  நிர்வாகியை  ஊழல்தடுப்பு  நிறுவனம்  ஒன்று  விசாரணை  செய்வது  இதுவே  முதல்முறையாகும். இதற்குமுன்  இப்படி  எதுவும்  நடந்ததில்லை.

இரண்டரை  மணி  நேரம்  பிரதமரைச்  சந்தித்து  விசாரணை  நடத்தியதை உறுதிப்படுத்தி  எம்ஏசிசியும்  அறிக்கை  வெளியிட்டிருக்கிறது.

“பிரதமர்  எம்ஏசிசி-யுடன்  நன்றாக  ஒத்துழைத்தார்”, என்று  அது  கூறிற்று.