அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் மகாதிரை அவமதிக்கும் முயற்சிகள் நடக்குமாம்

heckleநாளை  தொடங்கும்  அம்னோ  ஆண்டுக்  கூட்டத்துக்கு  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  செல்வாரானால் அங்கு  அவர் அவமானத்து  ஆளாகக்  கூடும்  என்கிறார்  அவரின்  தீவிர  ஆதரவாளரான  சைட்  அக்பர்  அலி.

கூட்டத்தின்  தொடக்கவிழாவுக்கு  வரும்  மகாதிரை  நோக்கிக்  கூச்சலிடவும்  கிண்டலடிக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக  வதந்திகள்  உலவுகின்றனவாம்.

காப்பிக்  கடைகளில்  காற்று  வாக்கில்  இச்செய்தி   காதுக்கு  எட்டியதாக  அவர் தன்  வலைப்பதிவில்  கூறினார்.

கூட்டத்தில்  பேராளர்கள்  ஆற்றப்போகும்  உரைகள்  கவனமாக  ஆராயப்படுகின்றன  என்றும்  அந்த  வலைப்பதிவாளர்  தெரிவித்தார்.

“1எம்டிபி,  ரிம2.6 பில்லியன்  நன்கொடை  ஆகியவை  தொடக்கூடாத  விவகாரங்கள். 1எம்டிபி பற்றியோ  ரிம2.6 பில்லியன்  பற்றியோ  கண்டிப்பாக  எதுவும்  பேசக்  கூடாது, விவாதிக்கக்  கூடாது”, என்றாரவர்.

பல கட்டுப்பாடுகளுடன்  ஆண்டுக்  கூட்டம்  நடக்கப்  போவதாக  அவர்  தன்  வலைப்பதிவில்  கூறினார்.