என்எஸ்சி சட்டவரைவு அரசமைப்புக்கு விரோதமானது: சுஹாகாம் சாடல்

sukahamமலேசிய  மனித  உரிமைகள்  ஆணையம் (சுஹாகாம்)  தேசிய  பாதுகாப்பு  மன்ற  சட்டவரைவு   2015  அரசமைப்புக்கு  விரோதமானது  எனச்  சாடியுள்ளது.

“அச்சட்ட  வரைவு  கூட்டரசு  அரசமைப்பையும்  அது வழங்கும்  அடிப்படை   உரிமைகளையும்  மீறுவதாகக்  கருதுகிறேன்”, என  சுஹாகாம்  உதவித்  தலைவர்  காவ்  லேக்  டீ  கூறினார்.

“அச்சட்ட  வரைவில்  மனித  உரிமையைப்  பாதுகாக்கும்  விதிகளே கிடையாது”  என்றாரவர். இன்று  கோலாலும்பூரில்  நடைபெற்ற  2015 மனித  உரிமை  தின  நிகழ்ச்சி  ஒன்றில்  கலந்துகொண்டபோது  காவ்  இவ்வாறு  கூறினார்.

அதே  நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட பிரதமர்  துறை  அமைச்சர்  பால்  லவ்,  காவின்  கூற்றுக்கு  எதிர்வினை  ஆற்றினார்.

“அதன்  சட்ட  அம்சங்கள்  பற்றி  எனக்குத்  தெரியாது.  ஆனால்,  என்னைப்  பொருத்தவரை,  ஊடுருவல்  என்னும்போது  அங்கே  உயிரிழப்பு  ஏற்படலாம்,  தேசிய  பாதுகாப்பும்  அபாயத்துக்கு  உள்ளாகும்.

“மனித  உரிமைகள்  பற்றி  நிறைய  பேசலாம்  ஆனால்,  அப்படிப்பட்ட  நேரத்தில்  கடுமையான  நடவடிக்கைகளே  தேவை”, என்றாரவர்.