அம்னோ புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. அந்த புற்றுநோய் கூறுகள் அகற்றப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் இன்று கூறினார்.
“அம்னோவுக்குள்ளிருக்கும் புற்றுநோயாளிகள் நிராகரிக்கப்பட வேண்டும்”, என்று கோலாலம்பூர் கம்போங் பாரு சுல்தான் சுலைமான் கிளப்பில் கூடியிருந்த ஆதரவாளர்களின் பலத்த ஆரவாரத்துக்கிடையில் முகைதின் கூறினார்.
நஜிப்பின் பெயரை நேரடையாகக் குறிப்பிடாமல் பேசிய அவர், “நேர்மையின்மை என்ற கடுமையான பிரச்சனையால் அம்னோ பீடிக்கப்பட்டிருக்கிறது”, என்று கூறினார்.
“அம்னோ மாறாவிட்டால், மக்கள் அம்னோவை மாற்றுவார்கள். அது வருத்தமளிக்கிற உண்மையாகும்”, என்றாரவர்.
நஜிப் பதவி துறக்க வேண்டும் என்று கோரும் உரிமை தமக்கு இல்லை என்று கூறிய முகைதின், சமூக ஊடகங்கள் எவ்விதத் தூண்டுதலும் இல்லாமல் அவ்வாறு கோரியுள்ளன என்றார்.
நஜிப் பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் என்றதை கேட்டதுமே அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அம்னோ தலைவர் பதவி இரு தவணைகளுக்கு மட்டுமே
நேர்மையற்ற, பேராசை பிடித்த தலைமைத்துவத்துவத்தினால் விளையும் சுமையை ஏன் மக்கள் சுமக்க வேண்டும் என்று அவர் வினவினார்.
மக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமானால், பண அரசியலையும் வேறூன்றிப்போன வேண்டியவர்களுக்கு ஆதரவளிக்கின்ற முறையையும் விட்டொழிக்க வேண்டும். கட்சியை வழிநடத்துபவர் உயர்ந்த நன்னெறி பண்புடையவராக இருக்க வேண்டும் என்றாரவர்.
அதிகார அத்துமீறல்களை தவிர்ப்பதற்கு அம்னோ தலைவர் பதவி இரு தவணைக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இன்றிரவு பேசியதற்கு தாம் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.
யார் வந்தாலும் இந்த மட்ட ரக புத்தி மாறாது– இது இவன்களுக்கே உரித்தான அறிவிலித்தனம். எவனாவது அறிவுடனும் பெருந்தன்மையுடனும் பேசி இருக்கானா?
உங்கள் சொத்து விபரங்களை மக்கள் பார்வைக்கு வைத்துவிட்டு இந்த அரசியல் சடுகுடுவை நடத்துங்கள் முன்னாள் அமைச்சரே!
ஊருக்குதான் உபதேசம் தனக்கில்லை என்பது மாதிரி இருக்கு! பிறரை சுட்டுமுன் உம்மை நீரே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இவை.
அன்வாரை போன்று முஹிடுனுக்கு போராட தெரியவில்லை .. அரசியலில் பெட்டில் பாம்புகள் விசம் கக்கி மயங்கும்.காலாவதியான
கருத்துக்கள எல்லோருக்கும் தெரியும்.
இன்னுமா இவருக்கு கருத்து தெரிவித்து கொண்டு இருக்கிறீர்கள் ? ஒரே காமிடியப்பா காமிடி …. இவர் ஒன்னும் ஜனநாகய வாதி அல்ல …. மகாதிர் ஆலையில் …புடம் போட்டு கழுவி எடுத்த UMNO பேர்விழி … இப்போ தலைவரோட கொஞ்சம் நெலவரம் சரியில்ல அவ்வளவுதாம் … நாளை அவர் கையை இவர் …ஒரு உடன் பாட்ட்டுடன் …..வேலையை பாருங்கப்பா …அரசியலுல இதெல்லாம் சாதாரணமப்ப …