நஜிப் விடுப்பில் செல்ல வேண்டும் என்பதை கிட் சியாங் வரவேற்கிறார்

callபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் குற்றமற்றவர்  என்று  நிறுவப்படும்வரை   அவர்  “சற்றே  விலகி இருக்க”  வேண்டும்  என்று  முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  கூறியிருப்பதை  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  வரவேற்றுள்ளார்.

“1எம்டிபி  மீதான விசாரணை  தடையின்றி  நடைபெற நஜிப்  பிரதமர்  பதவியிலிருந்து ‘சற்றே விலகி இருக்க  வேண்டும்’ என்று  முகைதின்  கூறுவதை  நான்  முழுமையாக  ஆதரிக்கிறேன்.  விசாரணைகளில்  அவருக்கு  எந்தத்  தொடர்புமில்லை  என்பது  தெரிய வந்ததும்  அவர்  திரும்பி  வரலாம்”, என  நேற்றிரவு   பினாங்கில்  உரை  நிகழ்த்தியபோது லிம்  கூறினார்.

ஆனால், முகைதினின்  வேண்டுகோளை  நஜிப்  ஏற்கப்போவதில்லை என்பது  உறுதி என்றும்  லிம்  குறிப்பிட்டார். “ஆயிரம்  ஆண்டு  ஆனாலும்  ஏற்க  மாட்டார்”.