போட்டி லவ் யாட் பிளாசாவுக்கு வருக: மலாய்க்காரர்- அல்லாதாருக்கு அமைச்சர் அழைப்பு

ismailகோலாலும்பூரில்  ஐடி  கருவிகள்  விற்பனைக்காக  திறக்கப்பட்டுள்ள  மாரா  டிஜிட்டலுக்கு  மலாய்க்காரர்- அல்லாத  பயனீட்டாளர்களும்  வர  வேண்டும்  எனக்  கிராம,  வட்டார  மேம்பாட்டு  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி யாக்கூப்  கேட்டுக்  கொண்டிருக்கிறார்.

“இங்குள்ள  கடைகள்  முழுக்க முழுக்க  பூமிபுத்ராக்களுக்குச்  சொந்தமானவை. ஆனால், வரும்  பயனீட்டாளர்கள்  எல்லா  இனங்களையும்  சார்ந்தவர்களாக  இருக்க  வேண்டும்  என்று விரும்புகிறேன்”, என்றவர்  அம்மையத்தைத்  திறந்து  வைத்தபோது  குறிப்பிட்டார்.

அதை  லவ்  யாட்  பிளாசாவுடன்  ஒப்பிட்டுப்  பேசிய  அமைச்சர்  அங்கு  கடைக்காரர்கள்  98 விழுக்காடு  பூமிபுத்ரா- அல்லாதார்.  ஆனால்,  பயனீட்டாளர்களில்  70  விழுக்காட்டினர்  பூமிகள்.  என்றார்.

விற்பனையாளரைப்  பார்க்கக்  கூடாது  விலை  நியாயமாக  இருக்கிறதா,  சேவை  தரமாக  உள்ளதா  என்பதைத்தான்  பார்க்க  வேண்டும்  என்றவர்  சொன்னார்.