நேற்று, கம்போங் பாரு, கிளப் சுல்தான் சுலைமானில் ‘அம்னோ துணைத் தலைவருடன்’ என்ற நிகழ்வில் முகைதின் யாசின் ஆற்றிய உரையை அம்னோ சிறப்புக் குழு ஒன்று ஆராயும்.
அதில் கட்சி விதிகள் மீறப்பட்டுள்ளனவா என்பதை அக்குழு ஆராயும் என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் தெரிவித்தார்.
அக்குழு செய்யும் முடிவு அம்னோ ஒழுங்கு வாரியம் மற்றும் உச்சமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.
“நேற்று அவர் உரையாற்றியதாக அறிகிறேன். கூட்டத்தில் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் என்பதும் தெரியும்.
“அதன் காணொளிப் பதிவை ஒரு சிறப்புக் குழுவிடம் கொடுத்திருக்கிறேன். பின்னர் அதை ஒழுங்கு வாரியத்துக்கும் உச்சமன்றத்துக்கும் கொண்டு செல்வோம்”, என்றவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
முகைதின் கட்சி உள்விவகாரங்கள் பற்றித் தம் உணர்வுகளை வெளிப்படுத்த நினைத்தால் அதற்குப் பொருத்தமான தளத்தைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பொது இடத்தில் கூறிக் கொண்டிருக்கக் கூடாது.
“உச்சமன்றம் என்ன முடிவு செய்தாலும் ஏற்றுக்கொள்வதாகக் கூறி இருக்கிறார். அப்படியே அவர் நடந்து கொள்ள வேண்டும்”, என தெங்கு அட்னான் கூறினார்.
ஆராய்ந்து உன் பீரங்கி வாயால் போட்டுத்தள்ளு .
இதில் ஆராய என்ன இருக்கிறது? முயுடினைத்தான் ஓரங்கட்ட எப்போதோ முடிவு ஆகிவிட்டதே. பிறகு என்ன இந்த ஆராய்ச்சி
வெங்காயம்.