குவான் எங்: ரிம2.6பி. கொடுக்கும் கொடையாளர் இருக்க முடியாது

lim guபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  தம்  வங்கிக்  கணக்குக்கு  வந்து சேர்ந்த  ரிம2.6 பில்லியன்  தாராள  மனம்கொண்ட  ஒருவர் அளித்த  ‘நன்கொடை’  என்று  கூறியிருப்பதை  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  நம்பவில்லை.

“இவ்வளவு  பெரிய  தொகையை  எந்த  நிபந்தனையுமின்றி  வாரி  வழங்கிய  அந்தக்  கருணை  உள்ளம்  கொண்டவர்  யார்? அப்படி  ஒருவர்  இருக்க  முடியாது.

“இவ்வளவு  பணம்  அமெரிக்க  அதிபர்  பராக்  ஒபாமாவின் வங்கிக்  கணக்குக்குக்கூட   நன்கொடையாக  வந்ததில்லை. மலேசியர்கள்  அதிர்ஷ்டம்   கெட்டவர்களாக  இருக்கையில்  நஜிப்  மட்டும்  எப்படி  அதிர்ஷ்டசாலியாக  இருக்கிறார்?”, என  லிம்  வினவினார்.

உலகப்  புகழ்பெற்ற  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டால்கூட  இவ்வளவு  பெரிய  தொகையை  நன்கொடையாக  பெற  முடிந்ததில்லை.

“அனைத்துலக  அளவில்  மகாதிர்  அளவுக்கு  நஜிப்  பிரபலமானவர்  அல்ல. ரிம2.6 பில்லியனைக்  குறிப்பிட்டால்தான்  பலருக்கு  நஜிப்பைத்  தெரிகிறது”, என்றாரவர்.

நேற்று உத்துசான்  மலேசியா, டிவி3, நியு ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ் உள்பட  பல  ஊடகங்களுக்கு  நஜிப்  அளித்த  நேர்காணல்  பற்றிக்  கருத்துரைத்தபோது  லிம்   இவ்வாறு  கூறினார்.