பிபிஐஎம் எச்சரிக்கை: சாயம் தெளிக்கப்பட்டதை விட மோசமான சம்பவங்கள் நடைபெறலாம்

 

 இன்று காலையில் டாமாய் மருத்துவமனைக் கட்டடத்தில் சாயம் வீசப்பட்ட சம்பவம் தமக்கு திகைப்பளிக்கவில்லை என்று மலேசிய முஸ்லிம் நுகர்வோர் மன்றத்தின் (பிபிஐஎம்) தலைமை ஆர்வலர் நாட்ஸிம் ஜோகன் கூறினார்.

இதுவும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கும் என்று தாம் கூறியிருந்ததாக அவர் தெரிவித்தார். இது குறித்து போலீசாரிடம் தெரிவித்திருந்ததாகவும் கூறிய நாட்ஸிம், அதிகாரிகள் இனப் பிரச்சனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுதான் நடக்கும் என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அம்மருத்துவமனையின் தாதியான நாஸியா சௌனி சாமாட் தாம் நீண்ட முழுக்கை சீருடை அணிந்திருந்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறிக்கொண்டதை நாட்ஸிம் குறிப்பிட்டார்.

ஆனால், அந்த தாதி ஒழுங்கு சார்ந்த காரணங்களுக்காக பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் சீருடைக்காக அல்ல என்று மருத்துவமனை கூறிற்று. அதனை தாதி மறுத்துள்ளார்.

சாயம் வீசப்பட்டதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று கூறிய நாட்ஸிம், மக்கள் தங்களுக்குக் கிடைத்ததைக் கொண்டு மருத்துமனைக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றாரவர்.

“நாங்கள் (பிபிஐஎம்) மருத்துவமனைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கிறோம். அவர்கள் (தாக்குதல் நடத்தியவர்கள்) இதனைச் செய்வதற்கு அவர்களிடம் வசதி இல்லை. ஆகவே, அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள்”, என்று நாட்ஸிம் கூறினார்.