அம்னோ இளைஞர் பகுதி பொருள், சேவைகளின் விலை உயர்வைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கட்சித் தலைமைத்துவத்தையும் அரசாங்கத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
“விலை உயர்வை இரத்துச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை, ஆனால், கட்சித் தலைமைக்கும் அரசாங்கத்துக்கும் அம்னோ இளைஞர் பிரிவு இதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது- போதும்.
“விலை உயர்வுகளை நிறுத்துங்கள். இதற்குமேல் வேண்டாம்”, என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் ஆற்றிய கொள்கை உரையில் கேட்டுக்கொண்டார்.
கைதட்டு பெறுவதற்காக இதைச் சொல்லவில்லை என்பதையும் கைரி வலியுறுத்தினார்.
“….வாழ்க்கைச் செலவினம் உயர்வதால் மக்கள் துன்புறுவதைக் கண்டு எங்களால் வாய்மூடி மெளனமாக இருக்க முடியாது”, என்றாரவர்.
இவரே அரசாங்கத்தில் மந்திரி. அப்புறம் இவரு அரசாங்கத்தை என்ன கேட்டுக் கொள்ள வேண்டி இருக்கு? யார் காதுல பூ சுத்துறான் இவன். இப்படிபட்ட மந்திகள்தாம் அந்த கட்சியில் அதிகமாக இருக்கின்றன. அதானால்தான் இந்த நாடு உருப்படவில்லை. இனி உருப்பட போவதும் இல்லை.
இனி அரசாங்கம் வியாபாரிகளை விலைகளை ஏற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்!
போதுமடா உங்கள் கபட நாடகம்.
ஆஹா அவளவு சீக்கிரம் பை நிறைந்துவிட்டதா ????