அரசாங்கத்தைக் கவிழ்க்க அன்னிய சக்திகளுடன் சேர்ந்து சதித் திட்டம் உருவாகி வருவதாகவும் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
“அது எளிய செயலல்ல. மக்களின் வரவேற்பைப் பெறும் செயலுமல்ல. ஆனால், நாட்டைப் பாதுகாக்க அதைச் செய்யத்தான் வேண்டும்.
“மக்கள் தொடர்ந்து அமைதியுடனும் இணக்கத்துடனும் வாழ தியாகங்களைச் செய்ய வேண்டும்”. புத்ரா உலக வாணிக மையத்தில் நடைபெறும் அம்னோ மகளிர் ஆண்டுக் கூட்டத்தில் ஆற்றிய கொள்கை உரையில் ஷரிசாட் இவ்வாறு கூறினார்.
மத்திய கிழக்கு நாடுகளில் மனித உரிமைகள், ஜனநாயகம் என்ற பெயரால் நடைபெற்ற போராட்டங்கள் பேரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளாதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எப்ப பார்த்தாலும் இந்த அந்நிய சக்திகளின் சதி புராணம்தான் பாடணுமா? வேற எதுவும் புதுசா சொல்ல தெரியல போல இந்த பாட்டிக்கு!
“மக்கள் தொடர்ந்து அமைதியுடனும் இணக்கத்துடனும் வாழ தியாகங்களைச் செய்ய வேண்டும்”.
எப்படிபட்ட தியாகம்? விலைவாசி ஏறினாலும் வாயை மூடிக் கொண்டு ஆண்டவனே கதி என்று எண்ணி தியாகம் செய்ய வேண்டும்! ஊழல் தலை விரித்தாடினாலும், பசு மாடுகள் பந்தாடப்பட்டாலும் சிவனேன்னு சும்மா இருந்து தியாகம் செய்ய வேண்டும்! அதிகார துஷ்பிரயோகம் நடந்தாலும், எலி அம்மணமாக ஓடினாலும் நமக்கென்ன வந்தது என்றெண்ணி ஆளுங் கட்சியோட இணக்கமாக வாழ தியாகங்களைச் செய்ய வேண்டும். இப்படி பல தியாகங்களைச் செய்து செய்து மக்கள் இன்று தியாகங்களின் எல்லைக்கே போய் விட்டனர். இனி மக்கள் எந்த தியாகங்களையும் செய்யத் தயாராக இல்லை அம்மணி. இனி ஊழல் அரசியல்வாதிகள் அரசை துறந்து மாமியார் வீட்டுக்குப் போக வேண்டிய தியாகத்தைச் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துட்டாங்களோ என்ற டவுட் எனக்கு வந்துடிச்சி அம்மணி.
அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அம்னோ மகளிர் தான் காரணம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அரசியல் என்றாலே நாலு காசு பார்க்கத்தானே வேண்டும் பேராண்டி! டைம்மு,காக்காதீரு,சாமி எலி,ராபிட,லிங்ன்னு இன்னும் எத்தனையோ எங்க bn ஆளுங்களே பாரு! மக்கள் காசுலே என்னம்மா போடு போடறாங்க! எந்த காலத்திலே அவங்க சொன்னத செய்திருக்காங்க? நானும் பணத்தை நிறைய சேர்த்துட்டா….இந்த பக்குட்டு தலை வச்சு படுக்கவே மாட்டேன்! எனக்கு வாய்ப்பு கிடைக்கவே குதிர கொம்பா இருந்தது…எதோ நம்ம தலை எனக்கு ஒரு இடம் கொடுத்தாரு….அவருக்கு விசுவாசம இருக்கவானாமா?
அதுக்கு அப்புறம் மேலே கிழேன்னு எல்லா பேய்களுக்கும் வாய்க்கரிசி வேற போடணும்! அதாலே ஏதாவது கோக்கு மாக்குன்ன….எனக்கு எதிரா கருப்பு கொடிய புடிட்சிருவாங்க எங்க மகளிர் மன்றம்! அந்த அளவுக்கு எங்க law ரொம்ப strict ட்டு….இப்படி எங்களுக்கே ஏகப்பட்ட பிரச்சனை இருக்கப்பா! (Pssst! அடுத்த முறை பாட்டின்னு கூப்படதே…..என் image க்கு பிரச்சனையா போயிரும்!)
இவளைப்போன்ற மடச்சிகளுக்கு வேறு என்ன தெரியும்? எதற்கு எடுத்தாலும் மற்றவர்களை காண்டல் அதிர்ச்சி– கையால் ஆகாத நக்கிகள்.
நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அந்நிய சக்தியிடம் விலை பேசுவது அம்னோ வுக்கு சொல்லி தரணும . இதிலே அந்நிய சக்தியுடன் கை கோர்ப்பதே நீங்கள் தானே . இன்னும் கொஞ்சம் காலம் போனால் மலேசியா சீன சியா வாக மாறும் , ஆச்சிரியம் இல்லை . இந்திய இன்னும் அடுத்தவனிடம் கையேந்திய வண்ணமே உள்ளது .
முதலில் உங்கள் கட்சியின் தலைமைத்துவத்தை பாருங்கள்.மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்துங்கள்.விலை உயர்வால் மக்கள் வேருபடைந்துள்ளனர்.பொருளாதரத்தை உயர்த்த வழி செய்யுங்கள்.மக்கள் துயரத்தை நினைத்து பாருங்கள்.உங்கள் சுகபோக வாழ்க்கைக்கு மக்களை பலி ஆகதிர்கள் அம்னோ.