அம்னோ ஆண்டுக் கூட்டத்துடன் தொடர்பில்லாதவர்கள் செனட் கூட்டத்து வராமல் இருப்பதை மேலவைத் தலைவர் அபு ஜாஹார் உஜாங் கடிந்து கொண்டார்.
“அம்னோ கூட்டத்துடன் தொடர்புள்ள அமைச்சர்கள் பலர் கூட்டத்துக்கு வராமலிருக்க நான் அனுமதி கொடுத்திருக்கிறேன். ஆனால். அதனுடன் சம்பந்தமில்லாதவர்கள் கண்டிப்பாக வர வேண்டும். ஏனென்றால் இது ஒரு முக்கியமான கூட்டம்”, என்றவர் தெரிவித்தார்.
சில செனட்டர்கள் அம்னோ கூட்டத்தைக் காரணம் காட்டி வராமல் இருக்கிறார்கள் என்றும் அது சரியல்ல என்றும் அபு ஜஹார் கூறினார்.
2016 விநியோக சட்டவரைவுமீதான விவாதத்தில் கலந்துகொள்ள மேலவை உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வருவது அவசியம் என்றாரவர்.
திங்கள்கிழமை தொடங்கிய மேலவைக் கூட்டம் டிசம்பர் 22வரை நடக்கும்.
பாவம் இந்த மேலவைத் தலைவர்! கூட்டத்திர்க்கு வாங்க வாங்க என்று வருந்தி அழைக்கும் அளவிற்கு இவர் தள்ளப் பட்டுள்ளதைப் பார்த்தால் NSC மசோதாவை தோற்கடிக்க செனட்டர்கள் சித்தாட்டம் ஆடுவது போல் உள்ளது.