முகைதின் யாசின் அம்னோவில் தலைவருக்கு அடுத்து இரண்டாம் நிலையில் இருக்கலாம். ஆனால், அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் அவரது நிழல்படத்தைக் காண்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.
ஒரே ஒரு சின்னப் படத்தைத்தான் பார்க்க முடிகிறது. மற்றபடி துணைத் தலைவரைக் கிட்டதட்ட “இருட்டடிப்பு” செய்யும் வேலைதான் நடந்துள்ளது.
புத்ரா உலக வாணிக மையத்தை நஜிப் அப்துல் ரசாக், அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஹிஷாமுடின் உசேன், ஷரிசாட் அப்துல் ஜலில், கைரி ஜமாலுடின் முதலிய அம்னோ தலைவர்களின் படங்கள் அலங்கரிக்கின்றன.
முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவியின் படம்கூட உண்டு.
ஆனாலும், இது வியப்பளிக்கவில்லை. முகைதினும், அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்டாலும் பிரதமரின் செல்லத் திட்டமான 1எம்டிபி-யைக் குறை சொன்னதால் அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டதை அடுத்து கட்சியில் ஒதுக்கப்பட்டு வருவது வெள்ளிடைமலை.
வழக்கமாக அம்னோவின் இளைஞர், மகளிர் கூட்டங்களை அம்னோ துணைத் தலைவர்தான் தொடக்கி வைப்பார். ஆனால், இவ்வாண்டு அந்த வாய்ப்பும் துணைத் தலைவருக்குக் கொடுக்கப்படவில்லை. அந்தந்தப் பிரிவுத் தலைவர்களே தொடக்கி வைத்தனர்.
அரசியல் கட்சிகளின் உட்பூசல் வழக்குக்களை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் சட்ட வரம்பு அதிகாரத்தை மாமக்தீர் அரசாங்கம் பறித்தததுடன் இந்நாட்டு அரசியல் கட்சிகளில் சர்வாதிகாரம், , சர்வாதிகாரம்,எங்கும் எதிலும் சர்வாதிகாரம் என்ற நிலை நிறுத்தப் பட்டுள்ளது. இதுவே அரசியலில் சர்வாதிகாரம், ஊழல், அதிகார துஷ்பிரயோகத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. இதற்கு அமீனோ கட்சியில் இருந்த, இன்று இருக்கின்ற அனைத்து அரசியவாதிகளும் உடந்தை. முன்செய்யின் பின் விளையும்.
சொந்த சாவுக்கு சங்கு உதுங்க்குள்