பிரதமர் நஜிப் ரசாக் தமக்கு கையூட்டு கொடுக்க முயன்றார் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் குற்றம் சாட்டினார்.
பல சந்தர்ப்பங்களில் நஜிப் தம்மைச் சந்தித்து தமக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளதாக மகாதிர் கூறினார்.
“இது கபடமற்றது என்று நினைத்து நாட்டிற்காக சில மேம்பாட்டு திட்டங்களை கூறினேன்.
“பின்னர்தான் தெரிந்தது அவர் எனக்கு இலஞ்சம் கொடுக்க முயல்கின்றார், அப்போதுதான் நான் 1எம்டிபி விவகாரத்தை எழுப்பமாட்டேன்”, என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் இன்றிரவு பதிவு செய்துள்ளார்.
ஐய்யயோ 1 மலேசியா – வைக் காணவில்லை. இருந்திருந்தால், ஊழலும், ஊழலும் சேர்ந்து தாண்டவமாடுகின்றது என்று கருத்து எழுதிருப்பார்.
இதை வைத்து மாமக்தீர் போலிஸ் ரிப்போர்ட் செய்யலாமே! அவருக்கும் போலிஸ் மீதும் இலஞ்ச ஒழிப்பு இலாகா மீதும் நம்பிக்கை இல்லையோ?. நீரே ஏற்படுத்தி வைத்த அரசு கட்டமைப்பை நீரே காறி துப்புமளவிர்க்கு கொண்டு வந்து விட்டாயே! இதுதான் உன்னுடைய செய்வினையின் பயன். அனுபவி.
இப்பொழுது நடக்கும் அமீனோ கட்சியில் ஒட்டுமொத்தமாக இன மத வெறியைப் பற்றிப் பேசும் தலைவருக்கு இடம் கொடுத்த நீரே இப்பொழுது குத்துதே குடையுதே என்று சொன்னால் யார் என்ன செய்ய முடியும். வரப் போகின்றதை இந்த நாட்டு மக்கள் அனுபவகிக்கத்தான் வேண்டும் என்பது விதியானால் அனுபவிக்கத்தான் வேண்டும்.
இன்று நிலா கட்சிக்கு கை நீட்டும் நன்கொடை நாயகன் இந்நாட்டை நடுத்தெருவில் நிற்க வைத்தவர் என்ற பட்டத்தோடு பதவி விலகுவார்.
நஜிப் இதற்கு என்ன பதில் கொடுப்பாரா இல்லை நடவடுக்கை எடுப்பார அல்லது மௌனம் சாதிப்பாரா??????????