ஜிஎஸ்டி இல்லையேல் அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு இல்லை

salaryபொருள்  சேவை  வரியைக்  குறைகூறுவோர் அது  மக்களுக்குப்  பெருஞ்  சுமை  என்கிறார்கள்.  ஆனால்,  அதை  அமல்படுத்தாமலிருந்தால்  அரசுப்  பணியாளர்களுக்குச்  சம்பள  உயர்வு  கிடைத்திருக்காது  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

“ஜிஎஸ்டி-யை  அமல்படுத்தும்  அரசியல்  துணிச்சல்  அரசாங்கத்துக்கு  இல்லாமல்  போயிருந்தால்  அரசாங்கத்தின்  நடப்புக்  கணக்கில்  ரிம10.6 பில்லியன்  பற்றாக்குறை  ஏற்பட்டிருக்கும்.

“அதன்  விளைவாக  அரசுப்  பணியாளர்களுக்கு- இதில்  ஆசிரியர்களும்  படைவீரர்களும்  சேர்த்தி-  சம்பளம்  கொடுக்கக்  கடன்  வாங்க  வேண்டிய  நிலை  ஏற்பட்டிருக்கலாம்.

“அப்படிப்பட்ட  நிலையில், அரசுப்  பணியாளர்களுக்கு  ஆண்டு  சம்பள  உயர்வும்  கிடைத்திருக்காது……1.61 மில்லியன்  அரசுப்  பணியாளர்கள்  அதனால்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்”, என்று  நஜிப்  கூறினார்..