எண்ணெய் விலை குறைந்துள்ளது ஆனால், மலேசியர்கள் கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது

oilஉலக  அளவில்  எண்ணெய்,  எரிவாயு  விலைகள்  குறைந்திருந்தாலும்  மலேசியர்களின்  மின்கட்டணம்  இரண்டு  விழுக்காடு  அதிகரிக்கப்  போகிறது. இதற்கு  நஜிப்  அரசாங்கத்தின்  கொள்கைகளே  காரணம்  என்கிறார்  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி.

அமைச்சரவை  இயற்கை  எரிவாயு விலையை  ரிம15.20-இலிருந்து  ரிம18.20 ஆக  உயர்த்த  முடிவு  செய்ததே  இதற்குக்  காரணம்  என்றாரவர்.

“இம்முடிவு  செய்யப்பட்டபோது  கைரி ஜமாலுடின்  அமைச்சரவைக்  கூட்டத்துக்குச்  சென்றாரா  இல்லையா  என்று  கேட்கிறேன்.

“சென்றிருந்தால்  அவரும்தான்  இதற்குப்  பொறுப்பு  ஏற்க  வேண்டும்.  அரசாங்கத்தின்  முடிவுகளால்  வாழ்க்கைச்  செலவினம்  கூடி  வருவதாகக்  கூறுவதன்  மூலம் அதற்குத்  தாம்  பொறுப்பல்ல  என்பதுபோல  அவர் காண்பித்துக்கொள்ள  முயலக்  கூடாது”, என ரபிஸி  கூறினார்.

“பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அதிகாரத்தில்  உள்ளவை  2016-இல்  வாழ்க்கைச்  செலவினம்  தொடர்ந்து  உயரப்  போகிறது”, என  அந்த  பாண்டான்  எம்பி  குறிப்பிட்டார்.