1990-இலும் 2008-இலும் அம்னோ தேர்தலில் அடைந்த தோல்விகளுக்கு முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட்தான் காரணம் என அம்னோ பொதுப் பேரவையில் பேராளர் ஒருவர் சாடினார்.
1990 தேர்தலில் அம்னோ கிளந்தானை பாஸிடம் இழந்தது. இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு மகாதிருக்கும் தெங்கு ரசாலி ஹம்சாவுக்குமிடையில் ஏற்பட்ட தகராறே காரணம் என முகம்மட் அல்வி சே மாட் கூறினார்.
“முடிவில் அம்னோ சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. அதனால் கிளந்தான் அம்னோதான் கடுமையாக பாதிக்கப்பட்டது.
“பெருந் தலைவர்கள் இருவர் அடித்துக் கொண்டதால் 1990 தேர்தலில் அது ஒரு இடத்தைக்கூட வெற்றிகொள்ள முடியவில்லை”, என அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் கொள்கைமீதான விவாதத்தின்போது அல்வி குறிப்பிட்டார்.
2008-இல், மகாதிர் அப்போதைய கட்சித் தலைவர் அப்துல்லா அஹ்மட் படாவியைக் கடுமையாக தாக்கிப் பேசி வந்ததால் ஆளும் கட்சி அதன் மூன்றுக்கு இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது என்று அவர் சொன்னார்.
மாமா மகாதிருக்கு பின் பதவியேற்ற அம்னோ தலைவர்கள் “கையாலாகாதவர்கள்” என்பதை வெளிப்படையாக ஒப்பு கொண்ட அம்னோ பேராளருக்கு வாழ்த்துக்கள்.
அப்படியானால் அடுத்த தேர்தலோடு அம்னோவின் அடக்கம் உறுதி என மறைமுகமாக கூறுகிறாரோ அம்னோ பேராளர் ?