முதல் டிங்கி தடுப்பூசி மெக்சிகோவில் அறிமுகம்

dengueடிங்கிக்  காய்ச்சலுக்கு  எதிரான  முதலாவது  தடுப்பூசிக்கு  மெக்சிகோவில்  புதன்கிழமை  அங்கீகாரம்  கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மலேசியா  அதை  இங்கு  அறிமுகப்படுத்த  தயக்கம்   காட்டுகிறது.

சுகாதார  அமைச்சு  அத்தடுப்பூசியை  மேலும் ஆராய்ந்து  வருகிறது.  மலேசியாவில்  பரவலாகக்  காணப்படும் DEN2 டிங்கிக்கு  எதிராக  அத்தடுப்பூசி  அவ்வளவாக  பலனளிப்பதில்லை  என  சுகாதார  அமைச்சின்  துணை  இயக்குனர்  டாக்டர்  நூர்  ஹிஷாம்  அப்துல்லா   பெர்னாமாவிடம்  கூறினார்.