மகாதிரைக் குறை சொன்னவர்மீது மற்ற பேராளர்கள் பாய்ச்சல்

deleஅம்னோ  பேரவையில்  பேராக்  பேராளர்  ஒருவர்  அம்னோவுக்கு  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  என்ன  செய்து  விட்டார்  என்று  கேள்வி  எழுப்பி  . மற்ற  பேராளர்களின்  ஆத்திரத்துக்கு  ஆளானார்.

அம்னோவின்  வெற்றிக்கு 20 ஆண்டுகளுக்குமேல்  அதற்குத்  தலைமை  தாங்கிய  மகாதிர்  காரணமல்ல  என்று  ஹம்சா  முகம்மட்  காசிம்  கூறப்போக  பேராளர்கள்  அவரை  விளாசித்  தள்ளினார்கள்.

“வெற்றி…. மகாதிர்  என்பரால்  வந்ததல்ல”,  என்று  அவர்  கூறியதும்  மற்ற  பேராளர்கள்  அவரை  நோக்கிக்  கூச்சல்  போட்டனர்  என  சினார்  ஹரியான்  கூறியது.

அவைத்  தலைவர்  பத்ருடின்  அமிருல்டின்  குறுக்கிட்டு  அமைதியை  நிலைநாட்டினார். வேறு விவகாரம்  பற்றிப்  பேசுமாறு  அவர்  பேராளரிடம் கூறினார்.

ஹம்சாவும்  அதற்கு  உடன்பட்டு  வேறு  விவகாரத்துக்குச்
சென்றார்.

இச்சம்பவம்,  மகாதிர்  நடப்பு  அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்குடன்  சர்ச்சையிட்டுக்  கொண்டிருந்தாலும்  அவருக்கு  அம்னோவில்  இன்னமும்  மரியாதையும்  ஆதரவு  இருப்பதக்  காண்பிக்கிறது.