14வது போதுத் தேர்தல் முடிவு மோசமாக இருந்தால் அதற்கு மகாதிரே காரணமாவார்

sallehஅடுத்த  பொதுத்  தேர்தலில்  அம்னோ/பிஎன்  அடைவுநிலை  மோசமாக  இருந்தால்  அதற்கு  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்தான்  காரணமாக  இருப்பார்  எனத்  தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  சாலே சைட்  கெருவாக்  கூறுகிறார்.

12வது  பொதுத்  தேர்தலில்  நடந்ததுதான்  மீண்டும்  நடக்கும்  என  சாலே  குறிப்பிட்டார். அப்போது  மகாதிர் தொடர்  விளக்கக்  கூட்டங்களை  நடத்தி  “பிஎன்னுக்கும்  அம்னோவுக்கும்  பாடம்  கற்பிக்க”  எதிரணிக்கு  வாக்களிக்குமாறு  மக்களைக்  கேட்டுக்கொண்டார்.

மகாதிரின்  செயலால் பிஎன்  2008  பொதுத்  தேர்தலில்  முதல்முறையாக  5 மாநிலங்களை  இழந்தது.

“அதுதான்  இப்போதும்  நடக்கிறது. அடுத்த  தேர்தலில்  அம்னோவும்  பிஎன்னும்  பின்னடைவு  காணுமானால்  அதற்கு  மகாதிர்  இப்போது  செய்து  கொண்டிருப்பதுதான் காரணமாக  இருக்கும்”  என்று  சாலே  தம்  வலைப்பதிவில்  கூறினார்.