விமானங்களுக்கு சரக்கு நிறுவனம் உரிமை கொண்டாடுகிறது

747கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையத்தில்  கைவிடப்பட்டுக்  கிடக்கும்  மூன்று  போயிங்  747-ரக  விமானங்களும்  தன்னுடையவை  என்று  விமானவழி சரக்கு  ஏற்றி-இறக்கும்  நிறுவனமொன்று  கூறியது.

கோலாலும்பூரைத்  தளமாகக்  கொண்டு  செயல்பட்டு  வந்த சுவிவ்ட்  ஏர்  கார்கோ,  இப்போது  அந்நிறுவனம்  ஸ்பலங்  என்’ டேஷ்  சென். பெர்ஹாட்  என்று  விளங்குகிறது, கேஎல்ஐஏ-இல்  நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்  அவ்விமானத்தை   மறக்கவில்லை  என்றும்  கூறிற்று.

கடந்த வாரம்  விமான  நிலையம்  அதன் விளம்பரத்தில்,  விமானத்தின்  உரிமையாளர்களை  அடையாளம்  காண  “விரிவான  முயற்சிகளை”  மேற்கொண்டும்  காணவில்லை  எனக்  குறிப்பிட்டிருப்பது  அந்நிறுவனத்துக்கு  வியப்பாக  இருக்கிறது..

“ஸ்விவ்ட்   அடிக்கடி  மலேசிய  விமான  நிலைய நிறுவன(எம்ஏஎச்பி) த்தைச்  சந்தித்து  வந்துள்ளது”, என்று  கூறிய அந்நிறுவனம்,  அண்மையில்  அக்டோபர்  நடுப்பகுதியில்கூட  சந்திப்பு  நடந்தது  என்றது.

“அடுத்த  சந்திப்பில்  எம்ஏஎச்பி   கேட்ட  ஆவணங்களையும்  தகவல்களையும்  கொடுப்பதற்காகக்  காத்திருக்கிறோம். ஆனால், எம்ஏஎச்பி-யோ  விமானங்களின்  உரிமையாளர்களைக்  காணவில்லை  என்று  அறிவித்திருக்கிறது”, என்று  அந்நிறுவனம்  மேலும்  கூறியது.

இதன்  தொடர்பில்  விமான  நிலைய  அதிகாரிகளை  உடனடியாக  தொடர்பு  கொள்ள  முடியவில்லை.