அம்னோ ஏஜிஎம்-மிலிருந்து மலேசியாகினி வெளியேற்றப்பட்டது

ejectமலேசியாகினி  செய்தியாளர்கள் அம்னோ  பேரவைக்  கூட்டத்தில்  செய்தி  சேகரிக்க  இன்று  தற்காலிகமாக  தடை  விதிக்கப்பட்டது. மலேசியாகினி  அம்னோவின்  நிதிநிலை  அறிக்கைகளை  வெளியிட்டதுதான்  இதற்குக்  காரணம்.

அம்னோ தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்,  மலேசியாகினி  செய்தியாளர்களுக்கு   அம்னோ  பொதுப் பேரவையில்  செய்திகள்  திரட்ட  அனுமதி  வழங்கப்பட்டிருந்தது  என்றும் ஆனால்,  அவர்கள்  அக்கட்சியின்  நிதி  அறிக்கைகள்மீது செய்தி  வெளியிட்டதால்  ஏஜிஎம்-மிலிருந்து  வெளியேறும்படி  இன்று  காலை  அவர்களுக்கு  உத்தரவிடப்பட்டது  என்றும்  தெரிவித்தார்.

“அவர்கள்  அந்த  ஆவணத்தைத்  திருடினார்கள். அதை வெளீயிடுவதற்குமுன்  எங்களிடம்  சரிபார்த்திருக்க  வேண்டும்.

“அவர்கள்  மீண்டும்  வரலாம். ஆனால், ஒழுங்குமுறையுடன்  நடந்து  கொள்ள  வேண்டும்.  எதற்காக  உண்மை அல்லாத  செய்திகளைத்  திரித்துக்கூறி பாதி- உண்மைகளை  மட்டும்  சொல்ல  வேண்டும்? அவர்கள்  செய்வதெல்லாம்  எங்களுக்குத்  தெரியும்”, என்று  தெங்கு  அட்னான்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

மலேசியாகினி  செய்தியாளர்களுடன்  த  மலேசியன்  இன்சைடர்  செய்தியாளர்களும்  வெளியேற்றப்பட்டனர்.

பிறகு  மலேசியாகினி  செய்தி  சேகரிக்க  திரும்பவும்  அனுமதிக்கப்பட்டது.