தவ்கேகளுக்கு பெரிய குத்தகைகளைக் கொடுக்காதீர்

delegateடிஏபி-யை  ஆதரிக்கும்   தவ்கேகளுக்குப் பெரிய  குத்தகைத் திட்டங்கள்  கொடுப்பதை  நிறுத்திக்  கொள்ள  வேண்டும்.

பொருளாதாரம்  மீதான  விவாதத்தில்  கலந்துகொண்டு  பேசிய  பேராளர்  அப்துல்லா மாட்  யாசிம்.  அத்திட்டங்களை  எடுத்து  நடத்தும்  நிறுவனங்கள்  டிஏபி-க்கு  உதவி வருவதாகக்  கூறினார்.

“டிஏபி-யை  ஆதரிக்கும்  தவ்கேகளுக்குப்  பெரிய  குத்தகைத்  திட்டங்கள்  கொடுக்கப்படுவதை  நிறுத்த  துறைத்  தலைவர்களும்  அம்னோ  தலைமைத்துவமும்  உதவ  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.

அம்னோ  தலைவர்கள்  பலர்  கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  ஆத்திரம்  கொள்வது  ஏன்  என்பதையும்  தன்னால்  புரிந்துகொள்ள  முடியவில்லை  என  அப்துல்லா  கூறினார்.

“வெள்ளம்  ஏற்பட்டபோது  கூட்டரசு  அரசாங்கம்  கிளந்தான்  மக்களுக்கு  ரொக்க  உதவி   கொடுத்ததைப்  பார்த்தேன் பிரிம்  உதவித் தொகை,  பள்ளிகளுக்குத்  தேவையான  உதவிகள்  கொடுக்கப்படுகின்றன.

“பிரதமர்  ஆனதிலிருந்து  கூட்டரசு  அரசாங்கத்திடமிருந்து  நிறைய  உதவிகள்  பெற்றிருந்தும்  தலைவர்கள்  நஜிப்மீது  ஆத்திரம்  கொள்வது  ஏன்”, என்றவர்  வினவினார்.