அம்னோவில் படிப்படியாக பிடிமானத்தை இழந்துவரும் முகைதின் யாசினைத் தற்காத்துப் பேசும் துண்டு வெளியீடுகள் அம்னோ பேராளர்களிடையே இன்று விநியோகிக்கப்பட்டன.
‘நான் துரோகி அல்ல’ என்ற தலைப்பில் 28-பக்கம் கொண்ட அத்துண்டு வெளியீட்டில் முகைதின் தன்னிலையை எடுத்துரைக்கிறார்.
தாம் எப்போதுமே கட்சிக்கு விசுவாசமாக இருந்து வந்திருப்பதாகவும் நஜிப் அப்துல் ரசாக் பிரதமராவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் சொன்னார்.
2009-இல் அப்துல்லா அஹமட் படாவியை விலகச் சொல்லி வற்புறுத்திய முக்கிய அம்னோ உயர் தலைவர்களில் முகைதினும் ஒருவர். அந்த வற்புறுத்தால் படாவி பதவி விலக நஜிப் பிரதமரானார்.
நஜிப்பின் எல்லாக் கொள்கைகளுக்கும், 1எம்டிபி தவிர, ஆதரவு கொடுத்து வந்திருப்பதையும் அவர் நினைவுறுத்தினார்.
1எம்டிபி-யை எதிர்த்ததுகூட அது நாட்டில் நிதி நெருக்கடியை உருவாக்கி விடும் என்ற கவலையே காரணம் என்றார்.