கடந்த வார அம்னோ பேரவையில் கலந்துகொண்டு உரையாற்றிய யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா (யுகேஎம்) மாணவப் பேராளர் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார்.
அதில் உரையாற்றி “சுயப் பிரதாபம்” தேடிக் கொள்ளும் நோக்கில் செயல்பட்ட பல்கலைக்கழக மாணவர் முகம்மட் பர்ஹான் கைருடின், மாணவர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
யுகேஎம் மாணவர் நலவளர்ச்சி சங்கமான மாணவர் ஒற்றுமை முன்னணி (எஸ்யுஎப்) , பர்ஹான் மாணவர் பிரதிநிதித்துவ மன்றத்தின் தலைவராக இருக்க தகுதியற்றவர் எனச் சாடியது.
கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய மாணவர் பிரதிநிதித்துவ மன்ற(எம்பிபி) தலைவரும் தேசிய மாணவர் ஆலோசனை மன்ற(எம்பிகேகே)த் தலைவருமான பர்ஹான், மாணவர்களை அரசாங்கத்தை நிராகரிக்க தூண்டும் சில விரிவுரையாளர்களை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
“அந்த வகையில் பர்ஹான் மரியாதைக் குறைவானர், பொறுப்பற்றவர். மாணவர் வளர்ச்சி பற்றியோ பல்கலைக்கழக வளர்ச்சி பற்றியோ நினைக்காமல் சுய புகழ்ச்சிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
“எனவே, அவரை எம்பிபி, எம்பிகேகே ஆகியவற்றின் தலைவர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்”, என எஸ்யுஎப் ஓர் அறிக்கையில் கூறியிருந்தது.
வாங்கின காசுக்கு வசனம் பேச வலிக்குமா என்ன?