மசீச, மலேசியாவில் ஹுடுட் சட்டத்தைக் கொண்டுவரும் பாஸ் முயற்சிகளை நெடுகிலும் எதிர்த்து வந்திருந்தாலும் பாஸுக்கு நட்புக்கரம் நீட்டும் அம்னோவின் முடிவில் தலையிடாது.
ஆனால், பாஸ் பிஎன்னில் சேர்வதை மசீச எதிர்க்கும் என அதன் தலைவர் லியோ தியோங் லாய் கூறினார்.
“அம்னோவின் உள்விவகாரங்களில் மசீச தலையிடாது.
“ஆனால், பாஸை பிஎன்னுக்குள் கொண்டுவருவதாக இருந்தால் அதை பிஎன் உச்சமன்றத்தில் விவாதித்துதான் ஆக வேண்டும்.
“அப்போது நாங்கள் எதிர்ப்போம். அது ஹுடுட்டைக் கைவிட்டால் மட்டுமே ஏற்போம்”, என்றவர் சொன்னார்.
முறையாக திருமணம் செய்து வைத்துக் கொண்டாலும் பெண்டாட்டிதான். அவளையே வைப்பாட்டியாக வைத்துக் கொண்டாலும் பெண்டாட்டிதான். பின்னது மானங்கெட்ட பிழைப்பு. இப்படி மானங்கெட்ட பிழைப்பு நடத்துபவனோடு இருந்து பிழைப்பு நடத்துபவனும் மானங்கெட்டவந்தான். இவனுக்குப் பெயர் “டாபர் மாமா”. கூட இருந்து கூட்டிக் கொடுப்பவன். உப்பு போட்டு சோறு சாப்பிடாத அமினோ கூட்டணிகாரனுக்கு எங்கு இருக்கு சூடு சொரனையெல்லாம். அதைவிட மோசம் இந்த டாபர் மாமா கட்சி உறுப்பினர்கள்.
ஹுடுட் கை விட்டால் ஏற்ப்போம்!. ஹுடுட் என்ற வார்த்தையை சொல்லாமலேயே அமீனோ கட்சி இந்நாட்டை மத சார்பற்ற நாடு என்ற நிலையில் இருந்து மதவாத அரசாங்கமாகி விட்டது தெரியாமல் இருக்கும் குருட்டு மந்திரியாரோ? வெட்கமில்லாமல் அரசியல் நடத்தும் நாலாந்தர மனிதர்கள் இவர்கள்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அம்னோவும் பாசும் கூட்டு சேர்ந்தால் எம் சி ஏ தெரு ஓர அரசியல் கட்சியாகிவிடும்!!! அமைதியாக வாசிப்பது பதவிக்கு நல்லது!!!!
பதவி இருந்து பிச்சைக்காரத் தொழில் செய்யும் மந்திரி பதவி எதற்கு?
1. மசீச தங்களின் நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்; இனி மஇக தங்களின் நிலைப் பாட்டையும் மக்களுக்கு தெளிவாகச் சொல்ல வேண்டும். ஒரு வேலை தேசிய முன்னணியில் பாஸ் சேரக்கப்படுவதை மஇக ஆதரித்தால், அதே தேசிய முன்னணியில் ஐபிஎஃப் கட்சியும் மற்றும் இதர இந்தியக் கட்சிகளையும் சேர்ப்பதற்கு மஇக ஆதரவுக் கொடுக்க வேண்டும்; தடங்கலாக இருக்கக் கூடாது.
ம சீ ச உங்கள் நிலைப்பாடு தேர்தலுக்காக மட்டும் இருக்க கூடாது.என்றும் இந்த நிலைபாடு அவசியம்.பாரிசானில் உள்ள மற்ற கட்சிகளின் நிலைப்பாடு என்ன?