அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கப்பட்ட ரிம2.6 பில்லியன் தொடர்பில் வழக்கு தொடுக்கும் தகுதி முன்னாள் லங்காவி அம்னோ உறுப்பினர் அனினா சாடுடினுக்குக் கிடையாது என நஜிப்பையும் அம்னோ நிர்வாகச் செயலாளர் அப்துல் ரவுஃப் யூசுப்பையும் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார்.
அனினா ஆகஸ்ட் 28-இல் அவ்வழக்கைத் தொடுத்தார். அவர் அப்பணம் அல்லது அதில் மீதமிருப்பது கட்சியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
அவர் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என நஜிப்பும் ரபுஃபும் மனுச் செய்திருக்கிறார்கள்.
அம்னோ வழக்குரைஞர் முகம்மட் ஹபாரிஸாம் ஹருன், அந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்றார். ஏனென்றால் அரசியல் கட்சி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்குக் கிடையாது.
“அது 1966 சங்கங்கள் சட்டம் பகுதி 18 சி-க்கு எதிரானது.. அச்சட்டப்படி இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை. மேலும், கட்சித் தலைவருக்கும் கட்சிப் பொறுபாளர் ஒருவருக்கும் எதிராக வழக்கு தொடுத்த கணமே அனினா கட்சி உறுப்பினர் தகுதியை இழந்து விட்டார்”, என ஹபாரிஸாம் கூறினார்.
அதே சட்டம் பகுதி 9(சி)-இன்கீழ் வழக்கு தொடுக்கும் சட்டத் தகுதி இல்லை என்றும் அவர் சொன்னார்.
1 MDB க்கும் 2.6 பில்லியன் நன்கொடைக்கும் தொடர்பு இல்லை, இது உண்மையிலேயே அரசியல் நன்கொடைதான் என உறுதியாகும் வரை இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட உரிமை உண்டு!!!
நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்த நேரத்தில் அவருக்கு உறுப்பினர் தகுதி இருந்தது. அதன் அடிப்படையில் அவர் பதிவு செய்த வழக்கை விசாரிக்க அந்த நீதிமன்றத்திற்கு சட்ட வரம்பு உள்ளது. பேச்சுரிமை இல்லாத இப்படிபட்ட அரசியல் கட்சிகளில் உறுப்பினராக சேர வேண்டுமா? இது ம.இ.க. விற்கும் தகும்.
அம்னோவுக்கான நன்கொடை 2.6 பில்லியன் அம்னோ ஆண்டு கணக்கு வழக்கில் குறிப்பிடவே இல்லை. ROS இந்த கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதேனோ?? ஆளும் கட்சி என்பதால் பதவி போய்விடும் என்ற அச்சமோ???
அம்னோ உறுப்பினராக இருக்கும்போது அனைத்து “தகுதி”களும் உண்டு ; “முன்னாள்” அம்னோ உறுப்பினர் ஆனவுடன் அனைத்து “தகுதி”களும் இயல்பாகவே இழந்து விடுகிறார். ஆகா ! அருமை ! அருமை ! அம்னோவின் “பணநாயகம்” !
அனினா சாடுடினுக்கு “தகுதி” இல்லையா ? அல்லது இவ்வழக்கை விசாரிக்க நாட்டில் உள்ள நீதிபதிகளுக்கு “தகுதி” இல்லையா ? அரசாங்கத்துக்கே “நீதி”-யில் நம்பிக்கை இல்லாதபோது, மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்.