பயங்கரவாதத்தை எதிர்க்கும் இஸ்லாமிய இராணுவக் கூட்டணியில் மலேசியா

saudபயங்கரவாதத்தை  எதிர்க்க  34  இஸ்லாமிய  நாடுகளின்  இராணுவக்  கூட்டணி  அமைக்கப்பட்டிருப்பதாக  சவூதி  அராபியா  இன்று  அறிவித்தது. அக்கூட்டணி  விடுத்த  கூட்டறிக்கை  அதைத்  தெரிவித்ததாக  சவூதி  அரசாங்க  செய்தி  நிறுவனம், எஸ்பிஏ  கூறிற்று.

“இதில்  குறிப்பிடப்பட்டிருக்கும்  நாடுகள்  சவூதி  தலைமையில்  பயங்கரவாதத்தை  எதிர்க்க  இராணுவக்  கூட்டணி  ஒன்றை  அமைப்பதென  முடிவு  செய்துள்ளன. அதன்  இராணுவ  நடவடிக்கைகளுக்கு  உதவ  கூட்டு  நடவடிக்கை  மன்றம்  ரியாட்டில்  அமைந்திருக்கும்”, என அக்கூட்டறிக்கை  தெரிவித்தது.

கூட்டுச்  சேர்ந்துள்ள  நாடுகளின்  பட்டியலில்  எகிப்து,  கட்டார்,  ஐக்கிய  அரபு  சிற்றரசு போன்ற  அரபு  நாடுகளும்  மற்ற இஸ்லாமிய  நாடுகளான  துருக்கி,  மலேசியா,  பாகிஸ்தான், குடா  நாடுகள்,  ஆப்ரிக்காவில்  உள்ள  இஸ்லாமிய  நாடுகள்  போன்றவையும்  இடம்பெற்றுள்ளன.