பெர்சே: மகாதிரும் முகைதினும் அரசியல் நிதியளிப்பைச் சீரமைக்கப் பாடுபட வேண்டும்

p fundமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டும்  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினும்  அம்னோவை  ‘பண  அரசியலி’லிருந்து  காப்பாற்ற  நடைமுறைக்கு  ஏற்ற  பரிந்துரைகளை  முன்வைக்க  வேண்டும்  என  பெர்சே கேட்டு  கொண்டிருக்கிறது.

அவ்விருவரும்  பண  அரசியலையும்  கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்   தனிப்பட்ட  வங்கிக்  கணக்கில்  அரசியல்  நன்கொடைகள்  சென்று  சேர்ந்திருப்பதையும்  குறைகூறி இருக்கிறார்கள்  ஆனால்,  அரசியல்  நிதிகள்  முறையானவையாக  இருப்பதை  உறுதிப்படுத்த  நடவடிக்கைகள்  எதுவும்  எடுத்துக்  கொண்டதில்லை.

அவ்விரு  அம்னோ  ‘கிளர்ச்சிக்கார’த்  தலைவர்களும்  தங்கள்  முயற்சிகளை  வீணாக்கிக்  கொண்டிராமல்  ‘காசேதான்  எல்லாம்’  என்ற  கலாச்சாரத்தை  முறியடிக்க  நடைமுறைக்கு  ஏற்ற  கருத்துகளை  முன்வைக்க  வேண்டும்  என்று  பெர்சே  ஓர்  அறிக்கையில்  கேட்டுக்கொண்டது.

“அது  இயலாவிட்டால், மகாதிரும்  முகைதினும்,  பெர்சே, ஜி25  ஆகியவற்றின் தலைமையில்  70  அமைப்புகள்  இரண்டு  வாரங்கள்  முன்பு  தொடங்கிய  அரசியல் நிதியளிப்பைச்  சீர்படுத்தும்   இயக்கத்துக்கு ஆதரவளிக்க  வேண்டும்”, என்று  அது  வலியுறுத்தியது.