போலீஸார் ஆகஸ்ட் மாதம் பெர்சே 4 பேரணியின்போது டாக்டர் மகாதிர் முகம்மட் தெரிவித்த கருத்துகள்மீதான விசாரணையை விரைவில் முடிந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“விசாரணை ஆவணங்களை இற்றைப்படுத்தி வருகிறோம். சட்டத்துறைத் தலைவருடனும் விவாதித்து வருகிறோம். விரைவில் அது முடிவுறும்”, எனப் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் தெரிவித்தார்.
அம்னோ அடிநிலைத் தலைவர்கள் கையூட்டு பெற்றார்கள் என்று மகாதிர் கூறியதன் தொடர்பில் அவர்மீது பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.
இதன் தொடர்பில், போலீசார் கடந்த மாதம் முன்னாள் பிரதமரிடம் வாக்குமூலமும் பதிவு செய்தனர்.
மாமாக்தீர் சட்டத்திற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு புறம்பாகவும் எவ்வளவோ பேசி எழுதி விட்டார். இந்நாட்டு போலிஸ் அதை இன்னும் விசாரித்துக் கொண்டுதான் இருக்கு! இந்த மாமக்தீரை நீதிமன்றத்திற்கு கொண்டு வர நன்கொடை நாயகனுக்கும் ‘ட்விட்’ தலைவனுக்கும் தைரியம் இல்லை போலிருக்கு.
மாமா மகாதீரின் ஒரு உரோமத்தை கூட புடுங்க முடியாது என்பது உலகமே அறியும். ஆகவே IGP இப்படியெல்லாம் கூறி, மக்களுக்கு நகைச்சுவை உணர்வை தூண்டுவது ரொம்ப ஓவருங்க !