செனட் தலைவர் என்எஸ்சி சட்டவரைவு மீது அம்பிகாவைச் சந்திக்க விரும்பவில்லை

nsc vதேசிய  பாதுகாப்பு  மன்ற  சட்டவரைவு  மீதான  விவாதங்களைத் தாமதப்படுத்த  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்வதற்காக  சமூக  ஆர்வலர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்  இன்று  நாடாளுமன்றத்துக்குச்  சென்றார். ஆனால்,  செனட்  தலைவர்  அபு ஸஹார்  உஜாங்  அவரைச்  சந்திக்க  மறுத்தார்.

அவர் “யாருடைய  தாக்கத்துக்கும்  ஆளாக  விரும்பவில்லை”  அதனால்தான்  தேசிய  மனித  உரிமை  சங்க(ஹகாம்)த்  தலைவரைச்  சந்திக்க  மறுத்தார்  என  இன்று  காலை  அபு  ஸஹாரைச்  சந்தித்த பிகேஆர்  செனட்டர்  சைட்  ஹுசேன்  அலி       தெரிவித்தார்.  மேலவை  10  மணிக்குத்  தொடங்குவதாக  இருந்ததால்  சந்திக்க அவருக்கு  நேரமுமில்லை  என்றாரவர்.

”எங்களுடையது  ஒரு  சாதாரண சந்திப்புத்தான். என்எஸ்சி  மீதான  விவாதத்தை  அடுத்த  கூட்டத்  தொடர்வரை  தாமதப்படுத்த  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டோம்.

“ஆனால்,  அது நடக்காது  என்று  தெளிவாக  தெரிகிறது. ஆனால், இந்தக்  கூட்டத் தொடரிலேயே  அதை  விவாதிக்க  செனட்டுக்குப்  போதுமான  நேரம்  அளிக்கப்படும்  என்றவர் வாக்குறுதி  அளித்தார்”, என்  சைட்  ஹுசே  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.