பெர்சே: புதிய இசி தலைவர் பழைய தவறுகளைச் செய்யக் கூடாது

maria cinதேர்தல்  ஆணைய (இசி) தலைவர்  அப்துல்  அசீஸ்  முகம்மட்  யூசுப்  விரைவில்  பணி ஓய்வு பெற  விருப்பதால்  அவருக்கு  அடுத்து  அப்பதவிக்கு  வருகின்றவர்  பழைய  தவறுகளை  மீண்டும்  செய்யக்கூடாது  என்று  பெர்சே  விருப்பம்  தெரிவித்துள்ளது.

அப்துல்  அசீசின்  செயல்பாடு  திருப்திகரமாக  இல்லை  என்று  கூறிய  பெர்சே 2.0  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா,  அவர்  பணி ஒய்வு  பெற்றுச்  செல்வதைக்  காண  ஆலவுடன் காத்திருப்பதாகக்  குறிப்பிட்டார்.

“சுருக்கமாக  சொல்வதென்றால்  இசி   இதுவரை  செய்ததையே  திரும்பவும்  செய்யக்  கூடாது. தேர்தலின்போது  வன்முறை  நிகழும்போது  குறிப்பிட்ட  அரசியல்  கட்சிகளைக்  கண்காணிப்பது  அவைமீது  வழக்கு  தொடரப்படுவது  எனப்  பாகுபாடு  காட்டக்கூடாது.

“இது  நிற்க  வேண்டும். தலைவர்  மட்டும்  மாறினால்  போதாது. மொத்த  கட்டமைப்பும்  மாற  வேண்டும்”, என்றார்.

தேர்தல்  முறையை  மேம்படுத்த  நான்கு  கோரிக்கைகளையும்  அவர்  முன்வைத்தார்.