துணைப் பிரதமர் மகளின் வீட்டில் கொள்ளை

robகாஜாங்  கண்ட்ரி ஹைட்ஸில்  உள்ள  நூருல்ஹிடாயா  அஹ்மட்  ஜாஹிட்டின்  வீடு  இரண்டாவது  தடவையாகக்  கொள்ளையிடப்பட்டது.

துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியின்  மகளான  நூருல்ஹிடாயா, 36, கொள்ளையர்கள்  வீட்டுக்குள்  புகுந்தபோது தாமும்  தம்  கணவரும்  இரண்டு  வீட்டுப்  பணியாளர்களும்  வீட்டில்  இருந்ததாக   தெரிவித்தார்.

ஆனால்,  அனைவரும்  ஆழ்ந்த  உறக்கத்தில்  இருந்தனர். கொள்ளையர்களும்  அவர்களை  எழுப்பவில்லை.

கொள்ளை  நடந்ததை  உறுதிப்படுத்திய   சிலாங்கூர்   சிஐடி  தலைவர்  முகம்மட்  அட்னான்  அப்துல்லா,  ஒரு  மடிக் கணினி,  ஐந்து  கடிகாரங்கள், திருமண  மோதிரம், சில  நகைகள்  உள்பட  ரிம25,000  பெறுமதியுள்ள  பொருள்களைக்  கொள்ளையர்கள்  கொள்ளையிட்டுச் சென்றதாகக்  கூறினார்.

நூருல்ஹிடாயாவின்  வீடு  கடந்த  ஆண்டு  ஏப்ரல்  மாதமும்  கொள்ளையிடப்பது. அப்போது கொள்ளையர்கள்  இரண்டு  கடிகாரங்களையும்  ரிம1,000 ரொக்கத்தையும்  எடுத்துச்  சென்றனர்.