பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கவிழ்க்கும் சதித் திட்டத்துக்குப் பிரபலமான தொழில் அதிபர்கள் சிலர் பண உதவி செய்ததாகக் கூறும் மலேசியா டுடே கட்டுரையை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
அத் தொழில் அதிபர்கள் டாக்டர் மகாதிரையும் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடினையும் லண்டனில் சந்தித்துப் பேசினார்களாம்.
அக்கட்டுரை முக்கிய பிரமுகர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருக்கிறது என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார்.
“கட்டுரையாளருக்கு எப்படி தகவல் கிடைத்தது என்பதை ஆராய்வோம்.
“அக்குற்றச்சாட்டுகள் முக்கிய பிரமுகர்களைக் களங்கப்படுத்துவதுடன் அரசாங்கத்தைக் கீழறுக்கும் சதி நடப்பதாகவும் தெரிவிக்கிறது”, என்று காலிட் கூறினார்.
மகாதிரும் டயிமும் அம்னோ, மசீச, மஇகா, டிஏபி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 40 எம்பிகளை, “விலைக்கு வாங்க” முயன்றதாகவும் அக்கட்டுரை கூறியது. ஆளுக்கு ரிம10 மில்லியன் கொடுக்க முன்வந்தார்களாம்.
பேசாம ‘மலேசியா டுடே’ பதிவாளரை இந்நாட்டு காவல் துறையின் துப்பறியும் பகுதித் தலைவராக நியமித்து விடாலாம். அவருக்குத் தெரிந்த உளவு வேலை கூட காவல் துறைக்கு தெரியாமல் இருப்பது அவமானம். இவர்களுக்கு எது வேண்டுமோ அதை மட்டும் விசாரிக்கும் புலனாய்வுத் துறைதான் இக்காவல் படையில் உள்ளது.
இப்படியே எதையாவது சொல்லி சொல்லி மக்களை திசை திருப்புவதே இந்த …….. களின் வேலையாக போய் விட்டது.
பிரதமருக்கு கொடுத்தால் “நன்கொடை”, மற்றவர்களுக்கு கொடுத்தால் “சதிதிட்டக்கு பண உதவி”-யா ! மலேசிய போலீசாரின் அற்புதமான கண்டுபிடிப்பு !
அதென்ன 40 எம்பிகளை “விலைக்கு வாங்க” ?
அப்படியானால் 2.6 பில்லியன் பிரதமருக்கு “நன்கொடை” கொடுத்த நன்கொடையாளர் பிரதமரை “விலைக்கு வாங்கி விட்டார்” என்று மக்கள் நினைப்பதில் தப்பில்லையே !
ஐய்யயோ 1 மலேசியா – வின் கருத்தை எடுத்து மலேசியகினியின் ஆங்கில பிரிவில் பதிவு செய்யுங்கள். அப்பொழுதாவது இந்த நாட்டு காவல்துறை மற்றும் பிரதமர் இலட்சணம் மக்களுக்கு புரியட்டும்.