இன்று பொதுக் கணக்குக்குழு(பிஏசி) 1எம்டிபி தலைவர் அருள் கந்தாவிடம் விசாரணை நடத்தப்போவதாகக் கூறப்பட்டிருந்ததால் விசாரணைக்குச் சென்று செய்தி சேகரிப்பதற்காக நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற செய்தியாளர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அங்கிருந்த போலீசார் இன்று ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்றனர்.
“இது மேலிட உத்தரவு. காரணம் தெரியவில்லை”, என்று கூறி விட்டனர்.
வேறு வழியில்லாமல் ஊடகவியலாளர்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியில் கார்களை நிறுத்தி வைத்து விட்டு கொளுத்தும் வெய்யில் காத்து நின்றார்கள்.
பிஏசி, அருள் கந்தாவை விசாரிப்பது இது இரண்டாவது தடவையாகும். இதற்குமுன் டிசம்பர் 1-இல் அவரிடம் ஐந்து மணி நேரம் துருவித் துருவி விசாரித்தது.
எல்லாம் நியாயமாக நடந்திருந்தால் எல்லாமே வெளிச்சத்தில் நடக்கும்– எல்லாம் பொய்யும் பித்தலாட்டம் என்றால் ஏன் வெளி சொல்ல வேண்டும்?