பேராக் முப்தி: மகாதிர் பாஸ்-அம்னோ இணைப்புக்கு என் உதவி நாடினார்

mufபேராக்  முப்தி  ஹருஸ்ஸானி  ஜக்கரியா,  அம்னோவையும்  பாஸையும்  இணைப்பதற்கு  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  ஒரு  முறை  அவரது  உதவியை  நாடியதாகக்  கூறினார்.

மகாதிரின்  வேண்டுகோளை  ஏற்று  அவர்  உடனே  இரு  தரப்பினரையும்  சந்தித்துப்  பேசினார்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  இரு  கட்சிகளையும்  இணைக்க  வழியுண்டா  என்று தம்மிடம்  கேட்டதாக ஹருஸ்ஸானி  தெரிவித்தார்.

“எல்லாப்  புகழும்  இறைவனுக்கே, நான்  அவர்களைச்  சந்தித்தேன். இறைவன்  அருளால்  எல்லாருமே ஒன்றுசேர  இணக்கம்  தெரிவித்தனர்”, என்றவர்  அல்-அஸ்ஹார் பட்டதாரிகளின்  வட்டார  மாநாட்டில்  கூறியதாக  மலாய்மொழி  நாளேடு  சினார்  ஹரியான்  கூறிற்று.