அம்னோ விரும்புவதுபோல் அதனுடன் கூட்டுச் சேர பாஸ் விரும்பவில்லை.
இப்படிப்பட்ட கூட்டு நீண்டநாள் நிலைக்காது, சண்டை சச்சரவுக்குத்தான் இட்டுச் செல்லும் என அம்னோ உதவித் தலைவர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா கூறினார்.
அவ்விரண்டு கட்சிகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு இஸ்லாத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ஒத்துழைப்பதற்கு இரண்டுமே மனப்பூர்வமாக விரும்ப வேண்டும்.
“அரசியலுக்காக ஒத்துழைப்பது என்றால் அப்படிப்பட்ட ஒற்றுமை உடன்பாடு மூலமாக எதுவும் நடக்காது.
“சிறிது காலத்துக்கு ஒன்றுபட்டிருக்கும். பிறகு சண்டையிட்டுக் கொள்ளும். முடிவில் கொள்ளையர்களிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுபோல் ஆகி விடும்”, என கிளந்தான் துணை மந்திரி புசாருமான அமார் கூறினார். நேற்றிரவு அல்-அஸ்ஹார் பல்கலைக்கழக பட்டாதாரிகள் வட்டார மாநாட்டில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
என்னாமா நாடகம் ஆடுகின்றார்கள் இந்த பாஸ் கட்சித் தலைவர்! தலைவர் ஒரு மாதிரியாம்! வால்கள் இன்னொரு மாதிரியாம். வால்களுக்கும் கிடைக்க வேண்டிய சனமாம் கிடைத்து விட்டால் அப்புறம் இவர்களும் தலைவருக்கு சேர்ந்தே ஒத்தூதுவார்.
இஸ்லாமியர்களின் ஒற்றுமை என்ற பெயரில் சுயநலத்தில் சுகம் காணும் பாஸ் கட்சி தலைவர்களை நம்பி இருக்கும் வாக்காளர்கள்/ ஆதரவாளர்கள் சற்று சிந்தித்தால் தெளிவு பிறக்கும்!!! இல்லையேல், “மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை” போல்தான் !!!!
அங்கு இஸ்லாம் வெறி இல்லை , மலாய் இன ஒருமைப்பாடு ! இஸ்லாம் வெறி இருந்தால், அம்னோ என்ற களவாணி பயலோடு பாஸ் கூட்டு சேராது !
நீ சொல்லாதே. உன் தலைவன் சொல்லட்டும்.