மலேசியாவில் காடழிப்பு வேலைகளாலும் அதனால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் மாற்றங்களாலும்தான் குரங்குகளுக்கு வரும் மலேரியா நோய் இப்பொது மனிதர்களிலும் அதிகம் காணப்படுவதாக லண்டனில் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொசுக்களால் பரப்பப்படும் asmodium knowlesi malaria என்னும் இந்நோய் காடுகளில் வாழும் மஹாக் வகை குரங்குகளில்தான் வழக்கமாகக் காணப்படும். அண்மையில் இது மக்களிடமும் காணப்பட்டது.
காடுகள் பரவலாக அழிக்கப்படுவதாலும் விவசாயத்தின் விரைவான விரிவாக்கத்தாலும் இந்த வகை மலேரியா இப்போது மலேசியாவில் பல இடங்களில் மனிதர்களிலும் சாதாரணமாகக் காணப்படுகிறது. தென்கிழக்காசியாவியாலும் இது பரவலாகக் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.