கிளந்தான், ஜோகூரை அடுத்து கோலாலும்பூர் மாநகராண்மைக் கழகமும் வேப் சிகரெட்டுக்குத் தடை விதித்துள்ளது.
டிபிகேஎல் உரிமம் வழங்குதல் மற்றும் சில்லறை வர்த்தக நிர்வாகத் துறை இயக்குனர் இப்ராகிம் யூசுப், இனி மின் சிகரெட் விற்பதற்கான உரிமம் வழங்கப்படாது என்றார்.
இதுவரை ஒரே ஒரு விண்ணப்பம்தான் வேப் விற்பனைக்கு உரிமம் கேட்டு வந்திருப்பதாக தெரிவித்த அவர் அதுவும்கூட நிராகரிக்கபட்டதாகக் கூறினார்.
“வேறு யார் விண்ணப்பித்தாலும் அதற்கு உரிமம் வழங்க மாட்டோம்”, என இப்ராகிம் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
மின்சிகரெட் விற்க வேண்டாம் எனப் பலசரக்குக் கடைகளிடமும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கோலாலும்பூரில் சாலைக்கு சாலை மது கடைகள் உள்ளன அதை மூடுவதுக்கு வழிய காணும் இந்த மாதிரியான சிறு விஷத்தை பெரிது படுதுகிரிர்கள் . காரணம் பெரும்பாலான குடிகாரர்கள் இந்தியர்கள் அதனால் தானே
malayan அருமையாக சொன்னார் ! தமிழன் குடிச்சி குட்டி சுவர் ஆனால் இந்த BN அரசுக்கு மகிழ்ச்சி !